Posts

Showing posts from January, 2021

எத்தியோப்பியா உள்ளக மோதல்; பிராந்திய மோதலாக பரிணமிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் கொரோனாவிற்கு எதிரான போரை நிகழ்த்தி கொண்டிருக்கும் சமகாலப்பகுதியில் ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவின் வடக்கில் மோதல்கள் எல்லைகள் முழுவதும் பரவி, ஒரு மூலோபாய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றன. உள்நாட்டு ஆயுதப்போர் கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தி வருவதுடன் இலட்சக்கணக்கான மக்களை நாடற்ற அகதிகளாக இடம்பெயர செய்துள்ளது. எத்தியோப்பியாவில், டைக்ரேயின் வடக்கு பகுதியில், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி ( TPLF - Tigray People's Liberation Front ) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான உள்நாட்டு பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் இருக்கும் 2.3 மில்லியன் குழந்தைகளுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையிலேயே சர்வதேச சமகால அரசியல் விவாகரத்தை ஆராயும் இக்கட்டுரை எத்தியோப்பியாவின் போரின் பின்னணியையும் அதன் விளைவையும் தேட முற்பட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா தேசத்தில் எழுந்துள்ள போர் முழக்கம் ஆபிரிக்காவின் நிம்மதியை சீர்குலைத்துள...