Posts

Showing posts from December, 2020

தடுப்பு மருந்தை அரசியலாக்குவது கோவிட் தொற்றை அதிகரிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
முழுமையான உலகிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளிலுமே 2020ஆம் ஆண்டு முழுமையாக தவிர்க்க முடியாத சொல்லாக கொரோனா வைரஸ் வியாபித்திருந்துள்ளது. 2020ஆம் ஆண்டு நிறைவடைகின்ற சூழலிலும் கொரோனா வைரஸின் தாக்கம் முற்றுப்பெறாத தொடராகவே நீள்கிறது. உலக நாடுகள் யாவற்றிலுமே இரண்டாம், மூன்றாம் அலைகள் என கொரோனா இடைவிடாது அழிவுகளை ஏற்படுத்தி கொண்டே உள்ளது. மறுபுறம் உலக நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைஸால் ஏற்படுத்தப்படும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதிலும் பரிசோதனைகளிலும் மும்மரமாக உள்ளனர். ஓராண்டு காலப்பகுதிக்குள் வெற்றிகரமாக தடுப்பு மருந்தை பூரண பரிசோதனை முறைகளினை பின்பற்றி கண்டுபிடிக்க முடியுமா என்பது தேடலாக காணப்படுகின்ற போதிலும் உலகின் பல நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். எனிலும் தடுப்பு மருந்து பிரயோகத்திலும் சர்வதேச அரசியல் போட்டி கடுமையாக தாக்கத்தை செலுத்தி வருகின்றது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரையும் கோவிட்-19 தடுப்பு மருந்தை மையப்படுத்தி எழுந்துள்ள சர்வதேச அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 த...

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் மீதான ஆதிக்கம்; ஓபாமா காலத்திலேயே வலுவிழக்கப்பட்டதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச செய்திகளில் முதன்மையாக உலாவிய பெயரொன்று மீள சமீபத்தில் பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவின் கறுப்பின தங்கம் பராக் ஒபாமா எனும் முன்னாள் வல்லாதிக்க அதிபதியின் பெயரே மீண்டும் சமீபத்திய சர்வதேச செய்திகளில் அவரது எழுத்துக்களால் பரபரப்பாக பரபரப்பாக பேசப்படுகிறது. பல அறியப்படாத சுவாரஸ்யமான அரசியல் நடப்புக்களை அரசியல் தலைமைகளின் சுயசரிதை நூல்களூடாக அறியலாம் என்ற எதிர்பார்க்கையுடன் அரசியல் தலைமைகளின் நூல்களுக்கு என்றும் தனி ஆவல் வாசகர்களிடையே காணப்படும். அதிலும் முன்னாள் உலக வல்லாதிக்க அதிபதியின் நினைவுக்குறிப்பு சார் நூல் என்கையில் பல சுவாரஸ்ய அரசியல் நினைவுகள் சர்வதேச வெளியில் புதிதாக உலா வரும் என்ற எதிர்பார்க்கை சர்வதேச அரசியல் வாசகர்களிடையே அதீதமாக காணப்பட்டது. அதற்கு தீனி போடும் வகையிலேயே பராக் ஒபாமாவின் நினைவு குறிப்பு நூலும் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பராக் ஒபாமாவின் நினைவுக்குறிப்பையும், அது வெளிப்படுத்தும் அமெரிக்க அரிசியலை உள்பார்வையாக தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமையை 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்...