அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் மீதான ஆதிக்கம்; ஓபாமா காலத்திலேயே வலுவிழக்கப்பட்டதா! -ஐ.வி.மகாசேனன்-
இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச செய்திகளில் முதன்மையாக உலாவிய பெயரொன்று மீள சமீபத்தில் பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவின் கறுப்பின தங்கம் பராக் ஒபாமா எனும் முன்னாள் வல்லாதிக்க அதிபதியின் பெயரே மீண்டும் சமீபத்திய சர்வதேச செய்திகளில் அவரது எழுத்துக்களால் பரபரப்பாக பரபரப்பாக பேசப்படுகிறது. பல அறியப்படாத சுவாரஸ்யமான அரசியல் நடப்புக்களை அரசியல் தலைமைகளின் சுயசரிதை நூல்களூடாக அறியலாம் என்ற எதிர்பார்க்கையுடன் அரசியல் தலைமைகளின் நூல்களுக்கு என்றும் தனி ஆவல் வாசகர்களிடையே காணப்படும். அதிலும் முன்னாள் உலக வல்லாதிக்க அதிபதியின் நினைவுக்குறிப்பு சார் நூல் என்கையில் பல சுவாரஸ்ய அரசியல் நினைவுகள் சர்வதேச வெளியில் புதிதாக உலா வரும் என்ற எதிர்பார்க்கை சர்வதேச அரசியல் வாசகர்களிடையே அதீதமாக காணப்பட்டது. அதற்கு தீனி போடும் வகையிலேயே பராக் ஒபாமாவின் நினைவு குறிப்பு நூலும் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் பராக் ஒபாமாவின் நினைவுக்குறிப்பையும், அது வெளிப்படுத்தும் அமெரிக்க அரிசியலை உள்பார்வையாக தேடுவதாகவே இக்கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைமையை 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' எனும்; புத்தகம் சிறந்த எழுத்தாளராகவும் அடையாளப்படுத்தியுள்ளது. பராக் ஒபாமாவின் ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் அதன் முதல் வாரத்தில் அமெரிக்க மற்றும் கனடாவில் 1.7 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது, இது பென்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்ட எந்தவொரு புத்தகத்திற்கும் மிகப்பெரிய வார ஒரு விற்பனை மொத்தம் என்று வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை முதல் நாள் விற்பனையில் 887,000ஐ உள்ளடக்கியது, இது பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் மற்றொரு சாதனை படைத்தது. பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் ஒரு பிரிவான கிரவுன் வெளியிட்டுள்ள இந்த நினைவுக் குறிப்பு நவம்பர் 17 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் வாசித்த புத்தகத்தின் தடையற்ற ஆடியோ பதிப்பு ஒரே நேரத்தில் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் ஆடியோவால் வெளியிடப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் முடிவு புள்ளிகள் (775,000 முதல் வார பிரதிகள்) மற்றும் பில் கிளிண்டனின் மை லைஃப் (அதன் முதல் எட்டு நாட்களில் சுமார் 1 மில்லியன்) ஆகிய இரண்டு சமீபத்திய ஜனாதிபதி நினைவுக் குறிப்புகளுடன் இந்த விற்பனை எண்ணிக்கை ஒப்பிடப்படுகிறது.பராக் ஒபாமாவின் ஜனாதிபதி நினைவுக் குறிப்பை இரண்டு கதை பாணிகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஜனவரி 2009 பதவியேற்பு வரை அவரது கிட்டத்தட்ட சினிமா வாழ்க்கைக் கதையை விவரிக்கிறது. மீதமுள்ளவை அவரது ஜனாதிபதி பதவியின் முதல் இரண்டரை ஆண்டுகளில் அர்ப்பணிக்கப்பட்டவை. அவை ஒரே நினைவுக் குறிப்பில் இருந்தாலும் அவை வெவ்வேறு புத்தகங்களைப் போல சில சமயங்களில் படிக்கின்றன. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து தென் கரோலினாவில் மறந்துபோன பள்ளி வரை, இடத்தின் உணர்வை ஒரு ஒளி ஆனால் உறுதியான கையால் தூண்டுகிறார். இது இரண்டு தொகுதிகளில் முதன்மையானது, இது அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் தொடங்குகிறது, அவரது ஆரம்ப அரசியல் பிரச்சாரங்களை பட்டியலிடுகிறது, மேலும் கென்டக்கியில் ஒரு கூட்டத்துடன் முடிவடைகிறது, அங்கு ஒசாமா பின்லேடனைக் கொன்ற அபோட்டாபாத் தாக்குதலில் ஈடுபட்ட சீல் குழுவுக்கு அவர் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அவரது கவனம் தனிப்பட்டதை விட அரசியல் ரீதியானது. குறிப்பாக அண்மையில் ஈழ அரசியலில் ஒபாமாவுடன் தொடர்புபடுத்தி பேசப்படும் ஒபாமாவின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தொடர்பான கருத்தானது, சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் மீதான செல்வாக்கு சரிவின் உண்மை நிலையை தடம் புரட்டி காட்டுவதாக அமைகிறது.
'ஐ.நா. இன் 1945 ஸ்தாபக சாசனத்தை நான் படித்தேன். அதன் நோக்கம் எனது தாயின் நம்பிக்கையுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கண்டு வியப்படைந்தேன்.' என்று ஒபாமா எழுதினார். உலகளாவிய உடலைப் பற்றி ஒரு குழந்தையாக தனது ஆரம்பகால உரையாடல்களைப் பிரதிபலித்தார். 'ஐ.நா. எப்போதும் இந்த உயர்ந்த நோக்கங்களுக்கு ஏற்ப வாழவில்லை என்று சொல்ல தேவையில்லை. அதன் மோசமான முன்னோடி, உலக நாடுகளின் சங்கம் போலவே, இந்த அமைப்பும் அதன் மிக சக்திவாய்ந்த உறுப்பினர்கள் இருக்க அனுமதித்துள்ளது.' என்று அவர் கூறினார். 'எந்தவொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, சோவியத் யூனியன் (பின்னர் ரஷ்யா), இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஒருமித்த கருத்து தேவை. ஒவ்வொன்றும் ஒரு முழுமையான வீட்டோவைக் கொண்டுள்ளன. பனிப்போரின் நடுவில், எந்தவொரு ஒருமித்த கருத்தையும் அடைவதற்கான வாய்ப்புகள் மெலிதாக இருந்தன. அதனால்தான் சோவியத் டாங்கிகள் ஹங்கேரியில் உருண்டது அல்லது அமெரிக்க விமானங்கள் வியட்நாமிய கிராமப்புறங்களில் நேபாமைக் கைவிட்டன. பனிப்போருக்குப் பிறகும், பாதுகாப்பு கவுன்சிலுக்குள்ளான பிளவுகள் ஐ.நா. இன் சிக்கல்களைச் சமாளிக்கும் திறனைத் தொடர்ந்தன. சோமாலியா போன்ற தோல்வியுற்ற மாநிலங்களை புனரமைக்க அல்லது இலங்கை போன்ற இடங்களில் இன சம்காரம் (Ethinic slaughter) தடுக்க அதன் உறுப்பு நாடுகளுக்கு வழிமுறைகள் அல்லது கூட்டு விருப்பம் இல்லை.' என ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பாதுகாப்பு சபை செயற்பாட்டை கடுமையாக சாடியுள்ளார்.
வெளிப்போர்வையில் மனித உரிமை செயற்பாட்டாளராக பராக் ஒபாமாவின் கருத்து நடைமுறைவாதத்தை பகிர்ந்துள்ளது என பாராட்டி செல்லாம். ஆயினும் பராக் ஒபாமா யார்? என்ன நிலையில் இருந்தார் என்ற பார்வையை செலுத்தும் போது அமெரிக்காவின் இயலுமை தொடர்பான கேள்வி உட்புறத்தே ஏற்படுவது இயல்பாகிறது.
அமெரிக்க பனிப்போரின் முடிவில் 1989ஆம் ஆண்டில் பிரதான எதிரியான சோவியத் ஒன்றியத்தை சிதைத்த பின்னர் உலக வல்லாதிக்க அரசாக தன்னை நிலைநாட்டியது. அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பல முடிவுகளை சுயாதீனமாக இயங்கி செயற்படுத்தி உள்ளது. மேற்காசிய அரசியலில் நுழைந்த செயற்பாடானது உலக வல்லாதிக்கம் என்ற போர்வையில் சுயாதீன முடிவாகவே இருந்து வந்துள்ளது. ஒபாமாவின் 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 'இலங்கை இன சம்காரம் (Ethinic slaughter)' நடைபெற்ற காலப்பகுதியில் ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக தனது முதலாவது காலப்பகுதியில் இருந்துள்ளார். அத்துடன் மே 13, 2009 அன்று நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பறித்த கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலை அவசர நடவடிக்கை மற்றும் இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ஒபாமா அழைப்பும் விடுத்துள்ளார். ஐ.நா. கூட்டு விருப்ப சிக்கலால் தலையிடாத சூழலில் மேற்கு ஆசியாவில் செயற்பட்ட சுயாதீன தன்மை 2009இல் இலங்கை விடயத்தில் அமெரிக்காவிற்கு இல்லாது போனது தொடர்பில் பலமான விமர்சனமான கேள்வி மேலெழுகிறது.
2008-2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தனது கடந்த கால நினைவு குறிப்பில் ஐ.நா. கூட்டு விருப்பு சாத்தியப்படாத சூழலில் உலக பாதுகாப்பை தளர்த்தி செல்கின்றது என்ற நினைவை கொண்டுள்ளாராயின் சர்வதேச நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் பராக் ஒபாமாவினுடைய ஆட்சிக்காலப்பகுதியிலே வலுவிழந்து போயுள்ளது என்ற செய்தியே வெளிப்படையாகிறது. பராக் ஒபாமாவினுடைய ஆட்சி காலப்பகுதியிலேயே சீனா சர்வதேச நிறுவனங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. இந்நிலையிலேயே ஒபாமாவின் பின்னர் ஆட்சிப்பீடமேறிய ட்ரம்ப் வலுவற்ற சர்வதேச நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கொள்கையை கடைப்பிடித்துள்ளார். குறிப்பாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார நிறுவனங்களிலிருந்தான ட்ரம்பின் வெளியேற்றத்துக்கான சூழல் ஒபாமாவினுடைய காலப்பகுதியிலேயே இடப்பபட்டுள்ளது என்ற செய்தியையே ஒபாமாவின் ஐ.நா மீதான விமர்சனம் வெளிப்படுத்துகிறது.
21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற அல்பிரட் தையர் மஹான்-இன் கணிப்பின் செல்நெறியிலான சீனாவின் எழுச்சியே அமெரிக்காவின் வீழ்ச்சியை தீர்மானிக்கின்றது. அதிஷ்டமற்ற சூழலில் அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பிக்கும் காலப்பகுதியில் ட்ரம்ப்-இன் வரவு அமையப்பெற்றதால் அமெரிக்காவின் வீழ்ச்சி சார்ந்து பலரும் ட்ரம்பின் ஆளுமையை குற்றம்சாட்டும் சூழல் உருவாக்கம் பெற்றுள்ளது. எனிலும் பராக் ஒபாமாவின் நினைவு குறிப்பு வெளிப்படுத்தும் நினைவுகளிலிருந்து நோக்குகையில் ட்ரம்ப் அமெரிக்காவின் சரிவு காலத்தில் நுழைந்து அதனை தடுக்க முடியாத தலைமையாக பயணித்துள்ளார் என்பதே நிதர்சனமான பார்வையாகும்.
Comments
Post a Comment