கொரோனா பரவலை தடுக்க மக்களே விழிப்பாக இருக்க வேண்டும். -ஐ.வி.மகாசேனன்-

கொரோனா பதற்றம் உலகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலுக்கும் சமகாலப்பகுதியில் கொரோனாவிலிருந்து மழுமையாக விடுதலை பெற்ற நாடாக 'Corona Free' பலகையை மாட்டி தெம்பா இருந்த இலங்கையை செப்டெம்பர்-04 முதல் கொரோனா வைரஸ் மீளவும் பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை இலங்கையில் காணப்படும் கொரோனா வைரஸ் சூழல் மற்றும் அதுசார் மக்கள் விழிப்புணர்வு பற்றி தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா அபாயம் பற்றிய உரையாடல் மற்றும் அதுசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே உயரளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக மார்ச்-13ஆம் திகதி இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச்-20 இலிருந்து கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதற்காய் சமூக இடைவெளியை ஏற்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் பேண அது பெரிதும் உதவியது. 16 ஏப்ரல் 2020 நிலவரப்படி, வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய 16வது அதிக...