ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் பாலஸ்தீனியர்களுக்கான அமெரிக்காவின் சதி! -ஐ.வி.மகாசேனன்-

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கா விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் கரங்களைப் பிடித்தவாறு “அமைதியை நோக்கி இஸ்ரேல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, இது தான் பாலஸ்தீனத்திறகான கடைசி வாய்ப்பு” என பாலஸ்தீனத்தை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய முரண்பாட்டிற்கு தீர்வாக மேற்குக் கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையான்மையயுடன் அங்கு பாலஸ்தீன சுதந்திர அரசு காணப்படும் எனவவும், ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும் எனவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆள்புல பிரிவினை வரைபடம் உருவாக்கி ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ எனும் பெயரில் அறிவித்தார். ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் பாலஸ்தீன சனாதிபதி மஹ்முத் அப்பாஸ் ட்ரம்பின் திட்டம் சதி திட்டம் என நிராகரித்துள்ளார். 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையில் கற்பனை செய்யப்பட்டதை விட பாலஸ்தீன அரசு 2020 ட்ரம்பினது அமைதி திட்டத்தில் குறைந்து போயுள்ளது. அத்தோடு சியோனிச ...