கிர்கிஸ்தான் அரசியல் குழப்பத்தால் ரஷ்சியாவின் உறவு சீர்குலையுமா! -ஐ.வி.மகாசேனன்-

மத்திய ஆசியா என்பது சமீபத்திய சர்வதேச அரசியலில் போராட்ட களமாகவே உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. முடிவில்லா போர்க்களமாக மாறியுள்ளது ஆர்மீனியா எதிர் அஜர்பைஜான் மோதல். மறுபக்கம் பெலாரஸ், மொன்ரிநீக்ரோ, வரிசையில் தற்போது கிர்கிஸ்தானிலும் நடைபெற்று முடிந்த தேர்தலை மையப்படுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது. எனிலும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளின் போராட்ட பின்னனியிலிருந்து கிர்கிஸ்தான் போராட்ட பின்னனி வேறுபடுகிறது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டம் ஜனநாயகத்துக்கான மக்கள் புரட்சியாகவே சர்வதேச அரசறிவியலாளர்களால் நோக்கப்படுகிறது. அதனடிப்படையில், இக்கட்டுரையும் கிர்கிஸ்தான் போராட்ட பின்னனிகள் மற்றும் நிலைமைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டத்தை தேடுவதாயின் அதன் புவியியல் அமைவிடமும் அவசியமாகிறது. கிர்கிஸ்தான் நாடு வடக்கே கஜகஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், மற்றும் தெற்கிலும் கிழக்கிலும் தஜிகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையாக உள்ளது. 1876ஆம் ஆண்டில், இது ரஷ்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறியது, ரஷ்சிய புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் கிர்கிஸ் சோவியத் சோசலிச குடிய...