சீனா சார்பு நிலைக்குள் 'சூகி'யின் தலைமையில் மியான்மர் நகருமா? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையை ஒத்த அரசியல் சூழமவை கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடாகிய மியான்மர் நவம்பர் முற்பகுதியில் தனது மூன்றாவது பொதுத் தேர்தலை ஆறு தசாப்தங்களில் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில் நடாத்தி முடித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும், தற்போது தென்கிழக்கு ஆசிய அரசு அதன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலை நடாத்தி உள்ளது. இது சர்வதேச அரசியல் நிபுணர்களால் உற்றுநோக்கப்பட்டதொரு பொதுத்தேர்தலாக அமைகிறது. ஏனெனில் நீண்ட கால இராணுவ ஆட்சிக்கு பின்னராக 2015ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை மீளத்திருப்பிய ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் பன்மடங்கு சவால்களை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள மியான்மரின் எதிர்கால அரசியல் போக்கினை கடந்த கால மியன்மரின் அரசியல் அனுபவத்திலிருந்து தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8ஆம் திகதி மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 92 அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன பிரச்சாரங்களைச் சேர்ந்த 6,900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1,171 இடங்களில் தேர்தலில் போட்டியிட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கார்ட்டர் மையம் தெரிவித்துள்ளது. யூனியன் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ முடிவுகளின்படி, ஆங் சான் சூகி மற்றும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்-க்கு (என்.எல்.டி) மற்றொரு பெரு வெற்றியையும் தீர்க்கமான முடிவையும் கொடுத்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால செயற்பாட்டை மியான்மியர்கள் ஏற்றுள்ளத்தையே தேர்தல் முடிவுகளும் உறுதி செய்தன. கடந்த 2015 தேர்தலில் என்.எல்.டி அனுபவித்த தோல்வியுற்ற மற்றும் பரவசமான வெற்றியை மேம்படுத்தியுள்ளது. என்.எல்.டி அதன் பெரும்பான்மையை அதிகரித்து, பைத்து ஹூலுட்டாவ் (கீழ் சபை) 255 இடங்களிலிருந்து 258 ஆகவும் (330 ஆசனம்), மற்றும் அமியோதா ஹூலுட்டாவிலும் (மேல் சபை) 135 இடங்களிலிருந்து 138 வரையிலும் (168 மொத்த ஆசனம்) ஆசனங்களை இம்முறை பெற்றுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 83.2 சதவீத இடங்களைக் குறிக்கின்றது. மியான்மரின் அரசியலமைப்பின் கீழ் இராணுவ வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவீத இடங்களைக் கண்டறிந்தாலும் கூட, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் என்.எல்.டி இன்னும் 61.7 சதவீத பெரும்பான்மையைக் கொண்டிருக்கும். இது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்பதையும், 75 வயதான ஆங் சான் சூகி இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சியில் நீடிப்பதையும் இது உறுதி செய்கிறது.

மியன்மாரின் 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரான அடுத்த ஐந்தாண்டு அரசியலை தேடுமிடத்து ஆங் சாங் சூகி என்ற ஆளுமையை பற்றியும் மியான்மரின் பூகோள அமைவிடத்தையும் தெளிவாக அறிய வேண்டி உள்ளது.

ஆங் சாங் சூகி-இன் அரசியல் அறிமுகம் மனித உரிமை செயற்பாட்டாளராக, ஜனநாயகவாதியாக, போராளியாகவே காணப்படுகிறது. 1991ஆம் ஆண்டில், 'ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அவரது அகிம்சை போராட்டத்திற்காக' சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியின் போதும் மியான்மாரின் ஜனநாயக மீட்பாராகவே புகழாரம் சூடப்பட்டது. எனினும் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற நிலையை துறந்தே செயற்பட்டிருந்தார். ஆட்சி அதிகாரத்தினை பெற முன்னர் எதிர்த்த இராணுவத்தின் சுயாட்சியை, தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக ஆதரித்து செயற்பட்டிருந்தார். குறிப்பாக நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் இராணுவத்தின் இனப்படுகொலை தொடர்பில் ஆபிரிக்க முஸ்லீம் அரசாகிய கேம்பியா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்து மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் பிரதிநிதியாக ஆஜராகி ஆங் சான் சூகி தெரிவித்த கருத்து முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில், ஆங் சான் சூகி மற்றும் என்.எல்.டி சில பகுதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டாலும், அவர்கள் பதவியேற்றபோது இருந்த அதிக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழவில்லை. அரசியல் ரீதியாக, உள்நாட்டில், தேசிய நல்லிணக்கம் மற்றும் பரவலாக்கலுக்கான நம்பிக்கைகள் மங்கிப்போயுள்ளதால், இனங்களுடனான ஆங் சான் சூகி-இன் உறவு பல ஆண்டுகளாக மோசமடைந்துள்ளது. மேலும் இராணுவத்துடனான அவரது உறவுகள் குறிப்பிடத்தக்க சுயாதீன செல்வாக்கைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டில், மியான்மர் அதன் வெளிநாட்டு சீரமைப்புகளை வலுப்படுத்தியிருந்தாலும், அந்த சீரமைப்புகளின் சமநிலை ரோஹிங்கியா நெருக்கடியின் மரபுக்கு இடையூறாகத் தொடர்கிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. மற்றும் மியான்மர் சீனாவை தொடர்ந்து நம்பியிருப்பதை வலுப்படுத்தியது.

மியான்மர் சீனா உறவு சார் நிலைப்பாட்டை ஆராயுமிடத்து ஆங் சான் சூகி என்ற ஆளுமை பற்றிய தேடலை தாண்டி மியான்மாரின் பூகோள அமைவிடத்தையும் ஆராய வேண்டி உள்ளது. மியான்மரின் எல்லையாக இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ் மற்;றும் தாய்லாந்து காணப்படுகிறது. குறிப்பாக சீனா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கிடையில் 2,200 கிலோமீட்டர் பகிரப்பட்ட எல்லை காணப்படுகிறது. அத்துடன் நாட்டின் வெளிப்புறப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் மியான்மர் இராணுவத்துடன் சீனாவின் நெருக்கமான உறவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, மியான்மரின் வெளியுறவுக் கொள்கையின் பரவலான கட்டமைப்பு யதார்த்தமாக உள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே சீனாவின் ஆதிக்கமும் ஆங் சான் சூகி-.இன் ஆட்சி காலத்திலும் முதன்மைப்பட காரணமாகியது. சீனா உரிமைசார் போராட்டக்குழுக்களுக்கு அப்பால் தொடர்ச்சியாக அரசு மற்றும் இராணுவத்துடனேயே தனது தொடர்ச்சியான உறவை பேணும் வெளிநாட்டு கொள்கையே பின்பற்றி வருகின்றது. இலங்கையிலும் இவ்வாறான வெளிநாட்டு கொள்கையை மையப்படுத்தியே ராஜபக்ஷ குடும்பத்துடன் சீனா நெருக்கமான உறவை கொண்டுள்ளது. 2015 இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போதும் இலங்கை அரசை கையாள இலங்கையில் உரிமைக்காக நீண்டகாலமாக போராடி வரும் தமிழ் சமூகத்தை நெருங்க முற்படாது தொடர்ச்சியாக இலங்கை அரசின் இராணுவம் சார்ந்து ராஜபக்ஷ குடும்பத்துடனேயே சீனா நெருக்கமான உறவை பேணி வந்தது. இத்தகையதொரு விம்பத்தையே தனது எல்லை தென்கிழக்கு அரசாகிய மியான்மாருடனும் சீனா கடைப்பிடித்து வருகிறது. மியான்மர் இராணுவத்துடன் தொடர்ச்சியாக சீனா கொண்ட நெருக்கமே அமெரிக்க நன்மதிப்பு பெற்ற ஜனநாயகவாதியையும் சீன பக்கம் சாய்த்தது எனலாம். இந்நிலையில் இராண்டாவது ஐந்தாண்டு ஆங் சான் சூகி-இனுடைய ஆட்சிக்காலப்பகுதியிலும் கடந்த கால அனுபவத்தில் சீனாவின் செல்வாக்கு தொடரும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகிறது.

எனிலும் சீனா தவிர்ந்த மியான்மரின் எல்லையோர அரசுகளும் ஆங் சான் சூகி மற்றும் மியான்மர் அரசுடன் நெருக்கமான உறவையே பின்பற்றி வந்துள்ளன. மியான்மரின் டாப்ஸி-டர்வி வெளிநாட்டு உறவுகளில் மூன்றாவது சக்தி ஜப்பான் ஆகும். இது பிராந்தியத்தின் புவிசார் அரசியலின் சீனா சாயலை காண்கிறது, இதனால் இனப்படுகொலை சாரந்த மேற்கு நாடுகளின் கண்டனங்களில் சேரவில்லை. ஆகஸ்ட் 21 முதல் 24 வரை, ஜப்பானிய வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மோட்டேகி நான்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டோக்கியோவின் இருப்பை வலுப்படுத்த பப்புவா நியூ கினியா, கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார். தொற்றுநோய்களுக்கு மத்தியில் அவரது சுற்றுப்பயணம் நடந்தது என்பது, சீனாவின் வளர்ந்து வரும் பிராந்திய செல்வாக்கை எதிர்கொள்ள அவரது பணியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன் ஆங் சான் சூகி இரண்டாவது தேர்தல் வெற்றிக்கு மின்னல் வேகத்தில் வாழ்த்து தெரிவித்தவர்களாக இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் அரசுகளே காணப்படுகிறது.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் 2015 கட்சி அறிக்கையில், மற்ற நாடுகளுடன் 'ஒரு செயலில் மற்றும் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்கும், நட்பு மற்றும் நெருக்கமான அரசியல் உறவுகளை ஏற்படுத்துவதற்கும்' உறுதியளித்தது. பரஸ்பர நன்மைக்கான கூட்டு பொருளாதார நிறுவனங்களில் மற்ற நாடுகளை அடையாளம் கண்டு ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, பிராந்திய நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளில் பிராந்தியத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதென உறுதியளித்தது. அதன் பரந்த பக்கங்களில், இது நாட்டின் 1974 அரசியலமைப்பிற்கு முந்தைய மியான்மரின் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. ஆங் சான் சூகி-இன் அரசாங்கம் கடந்த ஐந்தாண்டில் இக்கொள்கையையே பிரகடனப்படுத்தியது. 'அரசு தொடர்ந்து ஒரு சுதந்திர வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது, இது சர்வதேச சமாதானம் மற்றும் நாடுகளுக்கிடையேயான நட்பு உறவுகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.' 

இராணுவ சார்பு மற்றும் சீனா முதன்மை என்பது ஆங் சான் சூகி தனது ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான மாற்றங்களே ஆகும். மியான்மார் அரசியல் அனுபவமாவது, மேல்தட்டுவர்க்க அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் என்பற்றுக்கு அப்பால் அதிகாரத்தை உறுதிப்படுத்த எந்நிலைக்கும் செல்லும் என்ற அரசியல் யதார்த்தத்த்தையே உறுதி செய்கிறது. அத்துடன் இனப்படுகொலை சார்ந்த அமெரிக்காவின் எதிர்ப்பும் ரோஹிங்கியா மக்கள் நலன் சார்ந்தது அன்று. மாறாக மியான்மரின் சீனா சார்பு நிலையின் வளர்ச்சிக்கு எதிரானதே ஆகும். இந்நிலையில் ஆங் சான் சூகி தனது ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்த அமெரிக்காவின் உதவி தேவை என கருதுவாராயின், இரண்டாவது ஐந்தாண்டில் சீனாவை தளர்த்தும் நிலைப்பாட்டை ஆங் சான் சூகி எடுப்பதுடன் இனப்படுகொலை விவகாரத்தை அமெரிக்கவும் தளர்த்த முற்படலாம். 

எவ்வாறாயினும் மியான்மர் தேர்தல் முடிவுகள் கடந்த ஐந்தாண்டு ஆங் சான் சூகி-இன் அரசியல் நிலைப்பாட்டை பெரும்பான்மை மக்கள் ஏற்றுள்ளமையை பறைசாற்றுவதனால், மியான்மர் தொடர்ச்சியாக பிராந்திய அரசுகளுடனான நல்லுறவுடனேயே பயணிக்க முற்படும்.  தேர்தலின் முடிவை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கக் கடமைப்படும். மேலும் மியான்மரில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். குறிப்பிடப்படாத சிறுபான்மையினர் இதற்கிடையில் புறக்கணிக்கப்படும் நீள்ச்சியே சமாதானத்துக்கான நோபல் பரிசு வெற்றியாளர் ஆங் சான் சூகி-இன் தலைமைத்துவத்தின் கீழ் மியான்மரில் தொடரும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-