எதிர்க்கட்சிகளின் கூட்டு பொதுஜன பெரமுனாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருமா? -ஐ.வி.மகாசேனன்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தமக்கு சாதகமாக்கி கொள்ள இலங்கையின் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சிகளே இலங்கையின் அண்மைய சூடான அரசியல் களநிலவரமாக காணப்படுகிறது. குறிப்பாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணி உருவாக்கத்திற்கான முன்முயற்சிகள் அதிக விவாதங்ளை உருவாக்கி இருந்தன. எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் ஆளுங்கட்சியை பலப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் மற்றும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இரண்டாவது அதிக ஆசனங்களை(10) தக்கவைத்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஸ்திரமற்ற கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பிலும் அரசியல் அரங்கில் பல உரையாடல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இக்கட்டுரை எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும், அவற்றின் அரசியல் செல்நெறியை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்களையும் மற்றும் மக்களிடம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளை...