உத்தியற்ற ஈழத்தமிழரின் அரசியலும் இலங்கையின் இராஜதந்திர செயல்பாடுகளும் -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையை கொரோனா வைரஸ் பேரிடரும் சமதளத்தில் சர்வதேச நெருக்கடிகளும் உச்ச கட்டத்தில் சூழ்ந்துள்ளது. அரசியல் தலைமைகளின் உயிர்களும் கொரோனா வைரஸால் காவு கொள்ளப்படுகிறது. எனினும் மறுமுனையில் அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னர் வெளிவிவவகார அமைச்சின் செயற்பாடுகள் இலங்கையை சூழ்ந்துள்ள சர்வதேசநெருக்கடிகளை நீர்த்து போகச்செய்வதற்கான சூழலை வெளிப்படுத்துகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலகம் சர்வதேச தூதுவர்களின் வரவால் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. இப்பகுதியின் சென்ற வார கட்டுரையில் அமைச்சரவை மாற்றத்தினில் வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நியமனத்தில் காணப்படும் இராஜதந்திர மூலோபாய செயற்பாடு விபரிக்கப்பட்டிருந்தது. அதன் இன்னோர் நகர்ச்சியாக இக்கட்டுரை புதிய வெளிவிவகார அமைச்சு நியமனத்தை தொடர்ந்து இடம்பெற்றுள்ள அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்த உள்ள மாற்றங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எல்.பீரிஸ் (18.08.2021) உத்தியோகபூர்வமாக வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பு தென் இலங்கையை பரபரப்பான இயங்கு தளத்திற்குள் நகர்த்துகிறது. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்...