தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள்? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு மற்றும் புரிதல் தொடர்பில் தொடர்ச்சியாக சந்தேகங்களே அதிகரித்து வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்களும் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது நிவர்த்தியற்று அதனோடு வாழவும் தயாராகிவிட்டனர். தென்னிலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை கோரி அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களுக்கு தென்னிலங்கை கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கி இருந்தன. இன்று போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாய் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான குரலை தென்னிலங்கை கட்சிகள் எழுப்புகின்றன. மற்றும் மக்களின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தொடர்ச்சியாய் குரலெழுப்புகின்றார்கள். எனினும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டுள்ள எந்த அரசியல்வாதியும் பொருளாதார நெருக்கடியில் மக்களுடன் வரிசையிலும் இல்லை. பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவில்லை. மேய்ப்பானற்ற மந்தைகளாகவே தமிழ் மக்கள் அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றனர். இக்கட்டுரை தேசியத்தின் உள்ளடக்கங்களையும், தமிழரசியல் கட்சிகள் அது த...