பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை ஈழத்தமிழர் புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ள வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட (ATA) முன்வரைபு ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல்-25அன்று வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தாலிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கண்டனங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. முன்னைய பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் (PTA) தாண்டி உயரளவில் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமைகளை தடை செய்யக்கூடிய உள்ளடக்கங்களை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்வரைபின் ஏற்பாடுகள் கொண்டிருப்பதாகவே தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் பிராச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த தளத்தில் ஈழத்தமிழரசியல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான எதிர்வினையை இலங்கை தேசியத்துடன் ஒருங்கிணைக்காத வகையில் முன்னெடுக்க வேண்டிய தேவை அடையாளப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரமான வாழ்வியலை முழுமையாக தடைசெய்திருந்தது. ஒப்பிட்டு அடிப்படையில் நிராகரிக்கும் கோரிக்கையானது பின்னையதை நிராகரித்து முன்னையதை பேண வழிகோலக்கூடியதாகவும் அமைகின்றது. இக்கட்டுரை புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...