இன-மத வன்முறையை தூண்டும் தென்னிலங்கை அரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் இன்றைய அரசியலில் முக்கிய அம்சமாக இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் பூரணப்படுத்தும் உபாயங்களை வினைத்திறனுடன் மேற்கொள்ள தயாராகவில்லை. கால இழுத்தடிப்புக்கான உபாயங்களையே நகர்த்தி வருகின்றார். இச்சூழல் இனப்பிரச்சினையை உக்கிரப்படுத்தும் முறையிலேயே அமைந்துள்ளது. அரசாங்க உறுப்பினர்களே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாத செயற்பாடுகளை மும்மரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள். குறிப்பாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் அரசாங்கத்துக்கு உட்பட்ட வகையில் அரசாங்க திணைக்களங்களினாலேயே தமிழர்-சிங்களவர்களுக்கு இடையிலான இனப்பதட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்இனப்பதட்டம் மீளவொரு இனக்கலவரத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்கட்டுரை இலங்கையின் சமகால தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இனப்பதட்ட சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் க...