தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை தமிழ்த்தேசியத்துக்கானதாக அமையுமா? -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் வரவு-செலவுத்திட்டம் அதனை ஆதாரமாகக்கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகள் முட்டி மோதிக்கொண்டிருகின்றன. தமிழர் தாயகப்பகுதியில் தமிழரசியல் கட்சியின் திரட்சியும் நெடிய வரலாறும் தொடர்ச்சியாக சிதைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த வருடம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அறிவிப்புடன் இரு தசாப்தங்களாக தமிழ்த்தேசியத்தின் ஏகபிரதிநிதித்துவத்தை தக்கவைத்து, தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதைக்கப்பட்டிருந்தது. தற்போது தலைமைத்துவ போட்டியில் பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சிற்குள் நெருக்கடிகள் உருவாகியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் தொடர்ச்சியான முரண்பாடுகள் தமிழ்த்தேசிய அரசியலுக்கான ஆபத்தை அடையாளப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் எச்சரிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இக்கட்டுரை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிசார் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நான்கரை வருடங்கள் தாமதித்து எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி நடாத்துவதற்கு ந