தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவத்தை புதிய தலைமையின் செயற்பாடுகள் சீர்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கொதிநிலை விமர்சனங்களுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்வு தேர்தல் கடந்த வாரம் முடிவு பெற்றுள்ளது. புதிய தலைமையாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டட பாராளுமன்ற பிரதிநிதி சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒப்பான பிரச்சார போட்டிகள் தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளமை அதன் முக்கியத்துவத்தையே உறுதி செய்கின்றது. தமிழரசுக்கட்சிக்கு வினைத்திறனான தலைமை உருவாக வேண்டும் என்பதில் கட்சிக்கு வெளியே இருந்த கருத்தியலாளர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதனை மையப்படுதியே முந்தைய கட்டுரைகளில் தமிழரசு கட்சியின் தலைமைக்கான தேர்தல் தொடர்பில் இப்பந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரை தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழசுக்கட்சியின் புதிய தலைமைக்கு உள்ள பொறுப்புக்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவது, தமிழ்த்தேசியம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் காலப்பகுதியில் தமிழரசுக்கட்சியில் புதியதொரு தலைமை மாற்றம் உருவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசி...