ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் பொதுக்கட்டமைப்பினாலேயே சாத்தியப்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். பெருமளவில் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்கும் நிலைப்பாடுகளே அதிகளவில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அரசியலை மையப்படுத்தி இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுகள் தமது தேர்தல் அரசியல் நலன் மீதான அக்கறையுடன் தொடர்புற்றதாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகள் மூன்று கோணங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழ் சிவில் சமுகங்களும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் போதிய அக்கறையை வெளிப்படுத்தாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தலை தமிழ் சிவில் அமைப்புக்கள் கையாள வேண்டிய...