சஜித் பிரேமதாசா போர்க்குற்ற இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்! -ஐ.வி.மகாசேனன்-
.jpg)
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள போதிலும், தென்னிலங்கை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களுடனேயே நகருகின்றது. தமிழ் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய முனைப்பு ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான மக்கள் பொதுச்சபையின் ஒன்றிணைவில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு எனும் கட்டமைப்புக்கூடாக முன்னர்த்த இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு சில நகர்ப்புறங்களில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கியிருந்தனர். தமிழரசுகட்சி ஒரு உறுதியான முடிவை வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவையும் அறிவிக்காத நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தலில் பொதுக்குழுவில் அதிக வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் போன்றோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றார்கள். மாறாக, தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மா...