நினைவேந்தல்களை சமுகமயப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்படுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-

2024ஆம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடனேயே முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஒரு பக்கம் வெள்ளம், புயல் என்ற போன்ற இயற்கையின் சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கைகள் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதேவேளை அரசியலில் ஜே.வி.பி-யின் ஆட்சி மாவீரர் தின நாட்களில் புதிய வினோதங்களை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணங்களும் பொதுவாக காணப்படுகின்றது. வினோதங்கள் நேராகவோ, எதிராகவோ இரு வழியிலான சந்தேகங்களும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு எதிராக இலங்கை அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் கொடுமை மற்றும் கொலைக்கு, குற்றவாளிகள் இலங்கை சட்டத்துக்குள் தண்டிக்கப்பட்டிருந்தனர். எனினும் தண்டனையின் பின் விடுதலையடைந்த குற்றவாளிக்கு பின்னாட்களில், ஜே.வி.பி தனது தண்டனையும் வழங்கியிருந்தது. எனினும் ஈழப் போராட்டத்தில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா போன்ற போராளிகளுக்கு எத்தகைய தீர்வுகளையும் ஜே.வி.பி உரையாட தயாராகவில்லை. இவ்வாறான அனுபவத்தின் பின்புலத்தில் ஜே.வி.பி அரசாங்கத்தின் நேரான வினோதங்களை எதிர்பார்ப்பதும் சந...