அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
.jpeg)
ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும். எனிலும் உள்ளக அரசியலைப் போல வெளியுறவை கையாள்வது, எதிர்காலத்தையும் நெருக்கடிக்கு தள்ளக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றது. ‘உதவி செய்யாவிடினும் பரவாயில்லை; உபத்திரம் செய்யக்கூடாதெனும்’ உரையாடல் பொதுவில் காணப்படுகின்றது. அது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமானதாகும். ஈழத்தமிழர் அரசியல்வாதிகளின் ஆளுமைக்குள் தமிழ்த்தேசிய அரசியலினை முன்னேற்றகரமாக நகர்த்த முடியாவிடினும், அதனை அழிக்காது இருப்பதே சமகாலத்தின் தேவைப்பாடாகும். கடந்தவாரம் இப்பகுதியில் இந்தியாவின் தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவை மையப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட போலி விளம்பரம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் போலி விளம்பரம் தேர்தல் ஆசனத்தை மையப்படுத்திய போட்டியாக அமையலாம். தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவ்இயல்பு எதார்த்தமானதாகும். மறுதளத்தில் அயலக தமிழர் தின விழாவில் போட்டி ப...