Posts

Showing posts from April, 2025

மீனவர் பிரச்சினையை பயன்படுத்தி தமிழக-ஈழத்தமிழ் தொப்புள்கொடி உறவு அறுக்கப்படுகிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினை சமகாலத்தில் பூதகரமான வளர்ச்சியை பெற்று வருகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் கரிசணையற்ற தரப்பினராலேயே இப்பிரச்சினையும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பிணக்கை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான வகையிலேயே நெறிப்படுத்தப்படுவதாக அமைகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலையில் காணப்படுகின்றார்கள். தமிழக-ஈழத்தமிழர் முரண்பாட்டின் அதிகரிப்பு, ஈழத்தமிழர்களின் அரணை சிதைக்கக்கூடிய செயலாக அமைகின்றது. அதேவேளை தமிழக மீனவர்களின் அத்துமீறலால் ஈழத்தமிழ் மீனவ சமுகத்தின் பொருளாதார இருப்பு சிதைக்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமானதாகும். இதனை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தந்திரோபாயமாக கையாள்வதிலேயே ஈழத்தமிழர்களின் அரண் பாதுகாக்கக்கூடியதாக அமையும். இக்கட்டுரை தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினையை முன்னிலைப்படுத்திய சமகால முரண்பாட்டு சூழலை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-6 வரையான மூன்று தினங்கள் இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு தமிழகத்த...