காலிமுகத்திடல் போரட்டமும் பெருந்தேசியவாத சிந்தனையின் போக்கும்! -ஐ.வி.மகாசேனன்-
சமகாலத்தில் இலங்கை அரசியல் போராட்டங்களால் நிறைந்துள்ளது. மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் பங்காளி கட்சிகள் என பல்வேறு முனையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வீரியம் பெற்று வருகின்றது. “GO Home Gota” என்பதே இலங்கை முழுவதும் ஒலிக்கும் செய்தியாக உள்ளது. எனினும் வடக்கிலும் தெற்கிலும் போராட்டத்தின் வீச்சும் போராட்டம் தொடர்பிலான உரையாடல்களும் வேறுபட்டு காணப்படுகின்றது. தெற்கில் “GO Home Gota” போராட்டத்திற்கு எதிராக “We Want Gota” எனும் பிரசுரங்களுடன் அரசாங்க ஆதரவாளர்கள் ஒருசிலர் போராட்டங்களை முன்னெடுக்க முனைகையில் அதற்கு எதிரான கருத்துக்களே தெற்கில் அதிகளவில் உரையாடப்படுகிறது. எனினும் மாறாக வடக்கில் ' GO Home Gota ' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு சில இளைஞர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில் அப்போராட்டத்தின் மையக்கருத்துக்கள் தமிழ்த்தேசிய பிரச்சினையை உள்வாங்க தவறியுள்ளது என்ற விமர்சனத்துடன் தமிழர் ஆதரவு தேவையற்றது என்பதான கருத்தாடல்களே காணப்படுகிறது. இக்கட்டுரை ' GO Ho...