மேற்காசிய நாடுகளால் அரவணைக்கப்படும் இஸ்லாமிய சமூகங்களும் நிர்கதியாகும் ஈழத்தமிழரும்!
இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளனர். இந்நெருக்கடியை சீர்செய்ய இலங்கை தனது பிராந்திய மற்றும் சர்வதேச நட்பு நாடுகளிடம் உதவியை கோரி வருகின்றது. மகிந்த ராஜபக்ஷh பிரதமர் பதவி விலகிய பின் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரம் கொண்டிருந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட பிரச்சாரமும் சர்வதேச ரீதியாக ரணில் விக்கிரமசிங்க உதவிகளை பெறக்கூடியவர் என்பதாகவே அமைந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிய பின்னர் பொருட்களுக்கான மக்களின் வரிசைகளே அதிகரித்துள்ளது. முன்னர் வீதிகளில் வாகனங்கள் செல்வதாலேயே போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. தற்போது வாகனங்கள் எரிபொருளுக்காக வீதியின் இருமருங்கிலும் வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல்கள் உருவாகி உள்ளது. பிரதமர் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை முன்வைக்...