தென்னிலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாக தேசிய இனப்பிரச்சினை விளைவுகளை தமிழ்த்தரப்பு அடையாளப்படுத்திய போதிலும், தென்னிலங்கை அரசியல் தரப்பு தேசிய இனப்பிரச்சினை சார்ந்த உரையாடலை முழுமையாக தவிர்த்து வந்தன. அரகலவில் தேசிய இனப்பிரச்சினை உரையாடப்பட்ட போதிலும், மறுதளத்தில் அரகல இராணுவத்தை உயர்நிலையில் பேணியதனூடாக தேசிய இனப்பிரச்சினையின் கணதியை சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே சமகாலத்தில் தென்னிலங்கை அரசியல் தரப்பினரால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினை தீர்வானது இலங்கையில் காணப்படும் தேசிய இனங்களின் ஒருமித்த கருத்துக்களுடன் உருவாக்கப்பட வேண்டும். மாறாக ஒரு தரப்பின் விருப்புடன் திணிக்கப்படுகையில் ஏற்படக்கூடிய விளைவுகள் கடந்த கால அனுபவங்களாய் காணப்படவே செய்கிறது. இக்கட்டுரை தென்னிலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான திடீர் உரையாடலுக்கான காரணத்தையும், தமிழ் தர...