ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-
நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான பொறிமுறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான தேவைப்பாடு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருப்பினும், 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு, அதன் வடுக்களை களைவதற்காக இலங்கையில் கொண்டுவரப்பட்ட சர்வதேச உரையாடலாகவே நல்லிணக்க வரவு அமைகிறது. எனினும் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சர்வதேச உரையாடலுக்கு அமைய இடம்பெறவில்லை. அரசியல் நெருக்கடியை கையாள்வதற்கான இராஜதந்திர பிரச்சாரமாகவே இலங்கை அரசாங்கங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கடந்த ஆட்சிக்காலங்களும் வேறுபட்டதாக அமைந்திருக்கவில்லை. இந்த பின்னணியிலேயே தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முதன்மைப்படுத்தும் நல்லிணக்கம் சார்ந்த உரையாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக சந்தேகங்களை உருவாக்குகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க உரையாடலின் அரசியல் பின்புலத்தை தேடுவதாவே உருவாக்க...