சிங்கள பௌத்த அரசுக்கான சர்வதேச நெருக்கடியும் வடக்கின் பௌத்த மேலாதிக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகாலத்தில் இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கருத்துக்களும், அதற்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பினது கருத்துக்களுமே ஆழமாக நிறைந்து உள்ளது. இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்குவாரத்தினை எதிர்கொள்கின்றது. மறுதளத்தில், ஈழத்தமிழர் அரசியல்பரப்பில் ஜெனிவாவை மையப்படுத்திய அரசியல் களம் காணப்படுகின்றது. எனினும், தென்னிலங்கை மற்றும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே யாவற்றையும் மிஞ்சி சிங்க பௌத்த பேரினவாத அரசியலே பிரதான உரையாடலாக காணப்படுகின்றது. தமிழரசியலும் தென்னிலங்கையின் இனவாதத்தினை கண்டனம் செய்வதுடன் தமது எதிர்ப்பு அரசியலினை பதிவு செய்து நகர்ந்து செல்கின்றார்கள். மாறாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வீச்சு அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியவும் பகிரங்கப்படுத்தவும் வினைத்திறனான அரசியலை முன்னகர்த்த தயாரில்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை சமகாலத்தில் உயர்வீச்சுப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சார தேவைப்பாடுகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசாங்கங்கள் வரலாறுதோறும் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை பகுதியளவில் பேணி வருகின்றது. டி.எஸ். சேனநா...