ரணில் விக்கிரமசிங்காவை வலுப்படுத்த முயலுகிறதா அமெரிக்க இராஜதந்திரம்!

2012ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் அரசியல் போக்கில் மார்ச் மாத காலப்பகுதி என்பது மனித உரிமை விவகாரங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த ஆயுதப்போரில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மையப்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் காலத்துக்கு காலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. ஒரு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும், மனித உரிமை விவகாரங்களுக்கு நேர்த்தியானதொரு பொறிமுறையை கட்டமைக்க இலங்கை அரசாங்கம் தவறி வருகின்றது. சர்வதேச சமூகமும் தமது நலன்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் ஒத்திசைந்து செல்வதாகவும் தீர்மானங்களை நெறிப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி போர்க்குற்றங்கள் என ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை உரையாடல் 2018களில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னரான கலவரங்களை மையப்படுத்தியும், 2022களிற்கு பிற்பட பொருளாதார நெருக்கடிசார் மனித உரிமை விவகாரங்களை முதன்மைப்படுத்தியும் வடிவம் கொண்டுள்ளது. தற்போது நிகழ்நிலை சட்டம் சூடான விவாதத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இலங்கையின...