தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-
ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தகைமையை நிரூபிப்பதே இலங்கை அரசியலின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. தமிழ்ப்பரப்பில் தமிழ்ப்பொதுவேட்பாளர்கள் கடந்த காலங்களிலிருந்து முன்னேற்றகரமான விவாதத்தை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கியுள்ள போதிலும், அரசியல் கட்சிகளின் குழப்பமான கருத்துக்கள் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்த முனைவதாக அமைகின்றது. குறிப்பாக அண்மையில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ச்சியாக தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்கும் தொனியில் கருத்துரைத்துரைத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் நேரடியாக தெரிவிக்காத நிலையில், அத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்தாரா என்பதிலேயே பொதுவெளியில் பலமான சந்தேகங்கள் காணப்படுகின்றது. எனினும் இக்கட்டுரை சம்பந்தன் தெரிவித்திருந்தாரா? இல்லையா? ஏன்ற வாதத்துக்கு அப்பால், சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சுமந்திரன் ஊடகப்பரப்பில் வெளியிட்டுள்ள, 'தமிழ்ப் பொதுவேட்பாளரினூடாக ஒஸ்லோ இணக்கப்பாட்டை சிதைக்க இடைமளியாதீர்' எனும் கருத்...