பாரம்பரிய அரசியல் கட்சி மாயை பிரச்சாரம்; தமிழ்த் தேசிய அரசியல் கொள்கையே பாரம்பரியம்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் பொதுத் தேர்தலை மையப்படுத்தி தென் இலங்கைக்கு சமாந்தரமாக ஈழத் தமிழர் அரசியலும் போட்டிக்களமாக மாறி உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சை குழுக்களும் பிரதான போட்டியாளர்களாக காணப்படுகின்றார்கள். வெறுமனவே 28 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கில் 2000இற்கும் அதிகமானா வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். உயர்ந்த பட்ச ஜனநாயகம் சில சந்தர்ப்பங்களில் மக்களின் நலனை பாதிப்பதாகவே அமைகின்றது. இப்பொதுத் தேர்தலிலும் அதிகபட்ச வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. இதில் தமிழ் தரப்பு தமது அரசியல் பிரதிநிதியை தெரிவு செய்வது என்பது பெரும் குழப்பகரமானதாகவே காணப்படுகிறது. இன்னொரு பக்கம் மாற்றம் பற்றிய விவாதங்கள், கடந்த கால அரசியல் பிரதிநிதிகள் மீதான ஏமாற்றங்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய கட்டுக்கதைகள் தமிழ் மக்கள் மத்தியில் பொதுத்தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பில் விசனத்தையும் உருவாக்கியுள்ளது. இதில் தமிழ் மக்களின் தெரிவில், நிராகரிப்பு பற்றிய தெளிவு பிர...