தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்கேற்பும் துயர் பிரச்சாரங்களும்! -ஐ.வி.மகாசேனன்-
.jpeg)
ஈழத் தமிழர்களின் அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு பிரதான வகிபாகத்தை பெறுகின்றனது. குறிப்பாக பல அரசியல் வரலாற்று அறிஞர்களும் தமிழகத்தினை மையப்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பின் விளைவாகவே ஈழத் தமிழர்கள் நீண்டதொரு இன அழிப்பை இலங்கை தீவில் எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை விவரிக்கின்றார்கள். அதேவேளை தமிழகத்தின் பாதுகாப்பில் ஈழத்தமிழரின் கரிசணை தொடர்பிலும் புவிசார் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இது மொழியால் ஒன்றினைந்த ஒத்த இன சகோதரத்துவத்தின் அரசியல் இயல்பை தமிழகமும் ஈழத்தமிழர்களும் பகிர்ந்து கொள்கின்றமையையே அடையாளப்படுத்துகின்றது. எனினும் பாக்குநீரிணையின் இடைவெளி சில சந்தர்ப்பங்களில் சில வேறுபாடுகளையும், உறவுகளுக்கு இடையிலான தளர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. மறுமுனையில் சமகாலத்தில் தமிழக கலைத்துறையில் ஈழத்தமிழர்களின் பிரவேசம் சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது. இது பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒத்த சகோதரத்துவத்தின் இடைவெளிகளை குறைக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இக்கட்டுரை தமிழகத்தின் கலைத்துறையில் அதிகரிக்கும் ஈழ...