Posts

Showing posts from March, 2026

உலகளாவிய நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாக்க ஜே.வி.பியின் நாயக விம்ப பிரச்சாரம் போதுமானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
மேற்காசிய போரின் செய்திகள், மார்ச் முதல் வாரங்களில் இருந்த பரபரப்பினை, மார்ச் இறுதி வாரங்களில் பொதுவெளியில் அவதானிக்க முடியவில்லை. அதன் பொருள் மேற்காசிய போர் நெருக்கடி குறைவடைந்தது என்பதற்கு மாறாக, மக்கள் அதன் விளைவுகளோடு வாழப்பழக ஆரம்பித்துள்ளார்கள் என்பதே நிதர்சனமாகும். ஆயினும் நெருக்கடியின் வீச்சுகள் உயர்வடைந்து கொண்டே செல்கின்றன. அண்மையில் பொதுவெளி உரையாடல் ஒன்றில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ‘எரிபொருள் விலையேற்றத்துக்கு சமாந்தரமாக பயணக்கூலியை வாகன முற்பதிவு செயலிகளில் பெற முடியாமையால், கட்டிட கூலி வேலைக்கு செல்லப் போவதாக’ ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை போர் நீடிப்பு எரிபொருள் விலையேற்றம் ரூபா 800/= வரை செல்லக்கூடிய அபாய எச்சரிக்கையையும் அப்பொதுவெளி உரையாடலில் கேட்கக்கூடியதாக இருந்தது. இந்த எரிபொருள் விலையேற்றம் பற்றிய எச்சரிக்கைகள் தொடர் விளைவுகள் சார்ந்து நீளக்கூடியதாகும். இக்கட்டுரை கடந்த வாரத்தின் நீட்சியாகவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் பற்றிய செய்தி தேடலில், மின்சார விரயத்தை கட்டுப்படுத்துவதற்கான அறிவி...

அரசாங்கத்தின் தன்முனைப்பும் எதிர்க்கட்சிகளின் அதிகார போட்டியும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் இயங்கு நிலையை மேற்காசிய போர் கடுமையாக பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் எரிபொருள் விலையேற்றம் முதன்மையான பொது உரையாடலை பெற்று வருகிறது. இது அனைத்து பொருட்களின் விலையேற்றத்திலும் ஏதொவொரு செல்வாக்கு செலுத்தும் காரணியாக காணப்படுகிறது. அதேவேளை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து, அது வளைகுடா நாடுகளிடையே விஷ்தரிக்கப்பட்ட போது பெருமளவு தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு-கிழக்கு நாடுகளுக்கிடையிலான விமான சேவையின் வழிப்பாதை மற்றும் இடைத்தங்கலாக வளைகுடா நாடுகளே பெருமளவில் காணப்படுகிறது. போரை காரணங்காட்டி மாற்றுவழியில் இயக்கப்படும் தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவையும் செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெருமளவு சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக அமைகின்றது. இந்த பின்னணியில் மேற்காசியா போர் உலக நாடுகளுக்கு இசைவாக அல்லது ஒரு படி மேலாகவே இலங்கை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. எனினும் 2021-2022ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து சமகால நிலைமை மாறுபட...

மாக்சிச மரபாய் பிரச்சாரப்படுத்தும் ஜே.வி.பி சுரண்டலை ஆதரிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
மேற்காசியா போர் உலகை மீள பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக உலகிற்கான எரிபொருளின் மையம் மேற்காசியா சார்ந்தே காணப்படுகின்றது. மேற்காசியாவில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சர்வதேச நாடுகள் பொருளாதார குழப்ப நிலைக்கு தள்ளப்படும் இயல்பு காணப்படுகின்றது. இம்முறை ஈரான் சார்ந்து எழுந்துள்ள மேற்காசிய போரும் ஹர்முஸ் நீரிணை முடக்கமும் உலகிற்கான எரிபொருளின் பெரும்பகுதியை தடை செய்துள்ளது. இது நீளும் அபாயமே காணப்படுகின்றது. ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, 'ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக இதனை பயன்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். உலகின் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. இதன் முடக்கம் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. ஈரான் உயர் தலைவரின் எச்சரிக்கை அது நீடிக்கும் அபாயத்தையே குறித்து நிற்கின்றது. இக்கட்டுரை உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் திறனை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரங்களில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல்...

மேற்காசிய போரும் இலங்கையின் வெளியுறவும்! 'நடுநிலைமை மற்றும் மனிதாபிமானம்' -ஐ.வி.மகாசேனன்-

Image
மேற்காசியாவின் போர் ஆரம்ப நிலையில் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கீட்டை வழங்கக்கூடிய ஆபத்தையே சர்வதேச அரசியல் அவதானிகள் ஆருடம் கூறி வந்தார்கள். ஹார்மூஸ் நீரிணை இடைமறிப்பு மற்றும் எண்ணெய் வர்த்தக நெருக்கீடுகள் பற்றிய உரையாடலே சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட்டது. எனினும் இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல், மேற்காசியப் போரை இந்து சமுத்திரப் பிராந்தியம் வரை விஷ்தரித்துள்ளதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வெளியுறவுக்கொள்கைக்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலை எதிர்வுகூறப்படுகின்றது. தி ஹிந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, 'பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் சிறிய நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கைக்கு, வெளிப்புற  அதிர்ச்சி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அதைத் தாங்கும் அளவுக்கு போதுமான இடையகங்களை இன்னும் உருவாக்க முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை 'நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட...