ஜனாதிபதியின் கச்சதீவு விஜயமும் விளைவற்ற ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

செப்டெம்பர் முதல் வாரம் வடபுலத்திற்கான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் விஜயம், உள்ளூர் அரசியலை மாத்திரமின்றி பிராந்திய அரசியலையும் நொதிப்படைய செய்துள்ளது. பிராந்திய நாடாகிய இந்திய செய்திகளிலும் அநுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடைவதை மையப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டெம்பர்-01அன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அநுரகுமார திசநாயக்க, அதனோர் பகுதியாக இந்தியாவோடு கடல் எல்லையை பகிரும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான கச்சதீவுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் கச்சதீவு மீட்பு மைய விவாதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கச்சதீவுக்கான திடீர் விஜயமும் கச்சதீவை மையப்படுத்திய அரசியல் உரையாடலும் இந்திய அரசியல் தரப்புக்கான எதிர்வினையாகவே அவதானிக்கப்படுகின்றது. இக்கட்டுரை கச்சதீவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மையப்படுத்திய அரசியலை தேடு...