இலங்கைத்தீவில் போதை கலாசாரத்தை வேரறுக்க கட்சி அரசியல் கலாசாரம் மாற்றப்படுமா! -ஐ.வி.மகாசேனன்-
கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக தான் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் நிலையும் மாறிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றிகள் இலங்கையின் அரசியல் மாற்றமாகவே சிலாகிக்கப்பட்டது. புதிய வேட்பாளர்கள் புதிய பிரதிநிதிகளூடாக இலங்கை அரசியல் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பிரச்சாரப்படுத்தியது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகரின் போலிப்பட்டம் முதல் சில சச்சரவுகள் உருவாகிய போதிலும், தொடர்ச்சியான வேறுபட்ட பிரச்சினைகளுடன் போலிப்பட்ட சச்சரவு கரைந்து போனது. தற்போது போதை பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கால அரசியல்வாதிகளின் போதைப்பொருள் வியாபார தொடர்புகள் இனங்காணப்பட்ட நிலையில், சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் போதைப் வியாபார தொடர்புகளும் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் தூய்மைப்படுத்தப்பட்ட அரசியல் பிரச்சாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கேலிக்கைக்குரியதாகவும் ...