Posts

Showing posts from February, 2026

இனப்பிரச்சினைத் தீர்வு வரைபில் பெருகும் தீர்மானங்களும் முரண்பாடுகளும் எதிரியை பலப்படுத்துகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை அது பற்றிய உரையாடல் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் நிரவி காணப்படுகின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய அரசியல் வரைபை நிராகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பின்னணில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் சிவில் தரப்புக்களுடனும் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திம்பு கோட்பாட்டை முன்னிறுத்திய அரசியல் தீர்வை கூட்டாக தயாரிப்பதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். அதேவேளை ஏக்கிய இராச்சிய வரைபு உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கிய தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணினர் மீள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஏக்கிய இராச்சிய வரைபை பாதுகாக்கக்கூடிய சூழ்நிலைகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவில் தரப்பில் ஒரு பகுதியினர் 'ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று' என்ற கூட்டுப் ப...

போராட்டங்களால் வலுப்பெற்ற ஜே.வி.பி., போராட்ட சூழலை அரசாங்கமாக தடுக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்ற போர்வையில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் மீள இன்னுமொரு ஒரு போராட்டம் கிளர்ச்சி மற்றும் புரட்சி என்பவற்றின் ஊடாக தமது ஆட்சி மாற்றப்படக்கூடாது என்பதில் முன்னேற்பாடாக செயல்படுகின்றார்கள். உலக அரசியலில் இது பொதுவான மரபாகவே காணப்படுகின்றது. இம்மரபுக்குள் 2024ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொண்டஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி நகரும் சந்தேகங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளது. இடதுசாரி போர்வையில்  ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி பற்றிய பொது சந்தேகங்களில் ஜனநாயகம் மீதான சவால் பெரும் கேள்விக்குறியாகவே ஆரம்பம் முதல் எதிர்த்தரப்புகளால் முன்வைக்கப்பட்டு வந்தது. அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உருவாக்க முன்மொழியப்படும் சில சட்டங்கள் அதனை உறுதி செய்வதாகவே அமைகின்றது. குறிப்பாக ‘பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு’ (PTA) மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்’ (PSTA), எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முன்மொழிவாக குற்றம் சாட்டப்படுகின்றதூ. இவ்வாறே பலவழிமுறைகளிலு...

சுவிற்சர்லாந்து ஒருங்கிணைப்பு முயற்சியும் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
பல்லின சமூக கட்டமைப்பில் அரசு மீது நம்பிக்கை அற்ற தேசிய இனங்கள், தமது உரிமைகளை பாதுகாத்திட சர்வதேச அரசுகளின் தலையீட்டை மற்றும் ஆதரவை கோருகின்றன. இலங்கையில் ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளவும் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது. எந்த ஒரு அரசும் தமது தேசிய நலனுக்குள்ளேயே இயங்கும் என்பதே எதார்த்தமான நடைமுறையாகும். இங்கு தார்மீக ஒழுக்கங்கள் கற்பனாவாதங்களாகும். இக்கற்பனாவாதங்களை களைந்து, எதார்த்த நடைமுறைகளை புரிந்து கொண்டே ஈழத்தமிழ் அரசியல் நகர்த்தப்பட வேண்டும். இலங்கையின் புவிசார் அரசியல் அமைவிடமும் அதுசார்ந்த ஈழத்தமிழர்களின் அரசியல் முக்கியத்துவம் சர்வதேச அரசுகளின் கவனத்தை குவிக்கின்றன. இதனால் பிராந்திய, சர்வதேச அரசுகள் ஈழத்தமிழர் அரசியலை தமது நலனுக்குள் வளைத்துக் கொள்ள முயல்வதும் இயல்பான நடைமுறை அரசியலாக அமைகின்றது. இவற்றை அடையாளம் காண்பதும், இவற்றிற்கு மாற்றீடாக பிராந்திய-சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள் ஈழத்தமிழர்களின் நன்களை ஒருங்கிணைப்பது அவசியமாகின்றது. இக்கட்டுரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் அதிக ஈடுபா...

ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் தென்னிலங்கையின் நட்பு சக்திகளின் ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் வழி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது நீண்ட விவாதங்களையும் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டதாகும். இந்தப் பின்னணியிலேயே இப்பத்தி தொடர்ச்சியாக அரசியலமைப்பு உருவாக்கத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் சார்ந்து சில கவனங்களை உள்வாங்கி வருகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளகப் பொறிமுறை பற்றிய விவாதங்களில், ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை நட்பு சக்திகளை உருவாக்குவதும் ஒருங்கிணைந்து பயணிப்பதும் தொடர்ச்சியான பரிந்துரையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 2009ஆம்ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னரான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் தென்னிலங்கையுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது பிரதானமாக காணப்பட்டது. மறைந்த இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கியது தொடக்கம் சம்பந்தன்-சுமந்திரன் இலங்கை சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டமை முதலான பல நிகழ்வுகள் அதனை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றது. இது தென்னிலங்கை நட்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் வழி...