மாணவர் எழுச்சியை வலுப்படுத்துவது தமிழ் சமூகத்தின் பொறுப்பு! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியலில் தமிழ்த்தரப்பு தங்கள் உரிமை சார்ந்து முன்னெடுக்கும் முனைப்புக்கள் யாவும் ஏதொவொரு வகையில் சிதையுறும் நிலையே சமீபகால பதிவுகள் நீள்கிறது. இது தமிழ் தரப்பின் உரிமைசார் போராட்டத்தை தொய்வுற செய்யும் எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 23.04.2021 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கொரு புத்துணர்ச்சியான பதிவொன்றை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளவும் நிறுவியுள்ளமை தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பினை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்க தரப்பினரின் கடும் அழுத்தத்தின் மத்தியில் கடந்த ஜனவரி-08ஆம் திகதி இரவோடு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்று இரவே பல்கலைக்கழக சூழலில் பதட்ட நிலை உருவாக்கம் பெற்று மாணவர்களோடு தமிழ் அரசியல்...