சீனாவின் கடன்பொறி முறை இராஜதந்திரத்தில்; இலங்கை இறைமையை இழந்துவிட்டதா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அண்மைய வெளியுறவுக்கொள்கைசார் செயற்பாடுகள் அரசியல் நிபுணர்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிடமிருந்து பெற்றிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கை மீளச்செலுத்தி இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே தெரிவித்திருந்தார். அண்மைக்காலத்தில் இந்தியா மற்றும் மேற்கின் நிதிச்சுமைகளிலிருந்து இலங்கை வெளியேறுவதான செய்திகள் அதீதமாகவே வெளியாகி வருகிறது. இதனை வெளி பொதுப்பார்வையில் இலங்கையர்கள் மகிழ்வான செய்தியாக நோக்குவார்களாயின், நிதி அமைச்சின் செயலாளரின் தொடர்ச்சியான செய்திக்குறிப்பையும் அறிய வேண்டியது அவசியமகின்றது. 'சீனா மற்றும் இந்தியாவிலிருந்து நாணய இடமாற்ற வசதிகளைப் பெறுவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றதாகவும், பெப்ரவரி 2021இல் சீனாவிலிருந்து 1500 மில்லியன் கடன்கள் பெறப்படும்' என நிதி அமைச்சின் செயலாளர் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கடன் மீளழிப்பு கடன்சுமையை குறைவதற்கான பொறிமுறைக்கு மாற்றாக சீனா என்ற ஒரு அரசின் கடன்பொறிமுறைக்குள் உள்வாங்கப்படும் அணுகுமுறையாகவே காணப்படுகிறது. அதனடிப்படையிலே இக்கட்டுரையும் இலங்கை சீனாவிடமிருந்து கடன் பெறுகைக்கு பின்னாலுள்ள சீனாவின் இராஜதந்திர அணுகுமுறையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஈகை குணத்தை இராஜதந்திர நகர்வாக சர்வதேச அரசியலில் ஆழமாக உரையாடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க மற்றும் இந்திய இராஜதந்திரிகள் அதற்கான உரையாடலை ஆரம்பித்திருந்தார்கள். சீனா சிக்கலான 'கடன் பொறி இராஜதந்திரத்தில்' (Debt Trap Diplomacy) ஈடுபட்டுள்ளது என்ற உரையாடல் 2018 முதல் பெருவாரியாக எடுக்கப்பட்டது. எனிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஒரு இந்திய பண்டிதரால் அச்சிந்தனை முன்வைக்கப்பட்டது. 'கடன் பொறி இராஜதந்திரம்' என்ற சொல், சீனாவினால் அதன் எங்கும் நிறைந்த பட்டி மற்றும் சாலை முன்முயற்சியின் (Belt and Road Initiative) பாதைகளில் வளரும் நாடுகளுடனான உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களுக்கான நிலையான கடனை வேண்டுமென்றே தாக்குகிறது என்பதைக் குறிக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பகிரங்கமாக சீனாவின் கடன் பொறி இராஜதந்திரம் தொடர்பாக அலாரத்தை எழுப்பத் தொடங்கிய பின்னர் இத்தகைய எச்சரிக்கைகள் கூடுதல் புகழ் பெற்றன. அமெரிக்க வர்த்தக மற்றும் உற்பத்தி கொள்கை அலுவலகத்தின் இயக்குனர் பீட்டர் நவரோ சீனாவின் 'வளரும் நாடுகளுக்கு கடன்-பொறி நிதியுதவி' அளிப்பதைக் குறைத்தார், மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, அவரது முன்னோடி ரெக்ஸ் டில்லர்சனைப் போலவே, சீன கொள்ளையடிக்கும் பொருளாதார நடவடிக்கைகளின் அபாயங்கள் மற்றும் செல்வாக்கு குறித்து ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரித்தார்.
சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரத்தின் விளைவுகளை கடந்த காலங்களில் இலங்கை மற்றும் மலேசியாவில் சீனாவுக்கு சாதகமான அரசாங்க காலப்பகுதியில் சீனாவால் இடப்பட்ட முதலீட்டை சீனாவிற்கு எதிரான அரசாங்கங்கள் உருவாகுகையில் சீனாவின் உறவில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த போது சீனா கையாண்ட நடைமுறையில் சீராக அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக, இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திற்கு 99வருட கால குத்தகைக்கு போன வரலாறு சீனாவின் கடன்-பொறி இராஜதந்திரத்தின் விளைவின் முக்கிய சான்றாகும். இலங்கையில் என்ன நடந்தது என்பதை மறுபரிசீலனை செய்வது முக்கியம். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய இலங்கை பாழடைந்த உள்கட்டமைப்பை புனரமைக்க கடன் வாங்கியது. யுத்த வெற்றியை தமதாக்கி கட்டமைக்கப்பட்ட ராஜபக்ஷா அரசாங்கத்திற்கு, சீனா ஒரு நல்ல நண்பராக இருந்தது. மேற்கத்திய நிதி ஏற்பாடுகளின் கடுமையான நிபந்தனைக்கு ஒரு கவர்ச்சியான மாற்றாக, மலிவான மற்றும் எளிதான பணப்போதையை சீனா வழங்கியது. ஆனால் நாடு விரைவில் பொருளாதார துயரங்களுக்குள்ளாகியது. இது இலங்கை முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது. விமர்சகர்களுக்கு, இது சீனாவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்துவதோடு, சீன நிதியுதவியின் ஆபத்துக்களை நிரூபித்தது. வெளிப்படையான அரசியல் நிபந்தனை இல்லாத போதிலும், நிச்சயமாக இதுபோன்ற ஏற்பாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்ற எண்ணம் இலங்கையரிடம் பரவலாகியது. இத்துயரத்தினாலேலேயே 2015ஆம் ஆண்டு இலங்கையின் பெரும்பான்மை சிவில் சமூக கூட்டிணைவால் மகிந்த ராஜபக்ஷா அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சிப்பீடமேறிய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் சீனாவுடனான உறவை தளர்த்த முற்பட்ட போது சீனா தனது கடன் பொறி இராஜதந்திர ஆயுதத்தை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வீசியது. பொருளாதார கடன் சுமை ஏற்றுக்கொள்ள முடியாதபோது, திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக 2017 ஆம் ஆண்டில் துறைமுகத்தின் மீதான பெரும்பான்மை கட்டுப்பாட்டை கைவிட இலங்கை அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எடுக்கப்பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், 2017 டிசம்பரில் 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிற்கு ஹம்பாந்தோட்ட துறைமுகம் கையெழுத்தானது. இலங்கையின் உதாரணம் சீனாவின் தனித்துவமான 'கடன்-பொறி இராஜதந்திரத்தை' நிரூபிக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். இது ஒரு கொள்ளையடிக்கும் முறையாகும். இது நாடுகளை கடன் அடிமைத்தனத்தின் நேரான ஜாக்கெட்டாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவால் பயன்படுத்தப்பட்ட இந்த நேர்மையற்ற தந்திரோபாயத்தின் பெரும்பாலும் மேற்கோள் காட்டப்பட்ட வழக்குகளில் ஒன்றாகிய இலங்கையின் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை போன்றே, டிரான்ஸ்-மலேசியா ரயில் திட்டத்திலும் சீனாவின் கடன் பெருமளவில் உள்ளடக்கப்பட்டது. 2009-2018 காலப்பகுதியில் மலேசிய பிரதமராக இருந்த நஜீப் ரசாக் ஆட்சி காலப்பகுதியில் மலேசிய சீனா உறவு என்பது சீனாவுக்கு சாதகமான நிலையில் காணப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் மலேசியாவும் இணைந்து கொண்டது. அதனடிப்படையில் சீனா மலேசியாவின் உட்கட்டமைப்பு முதலீட்டில் அதிகளவு நிதியினை வழங்கியது. இது மலேசியாவில் சீனாவின் கடன்பொறிமுறையை கனதியாக்கியது. மலேசிய பொருளாதாரத்தின் பெரும்பகுதி சீனாவை தங்கியிருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு, சீனா மலேசியாவிற்கான மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக(($42.5B) இருந்தது. சீனாவை தொடர்ந்தே சிங்கப்பூர் (($35.7B) மற்றும் அமெரிக்கா (($33.1B) என்பன காணப்படலாயிற்று. ஏற்றுமதிக்கு சீனாவை மலேசியா நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகியது. இந்நிலையிலேயே 2018ஆம் ஆண்டு மே தேர்தலில் வெற்றி பெற்று மலேசியாவில் ஆட்சிக்கு வந்த மகாதீர் மொஹமட், தேர்தலுக்குப் பின்னர் ஆரம்ப நாட்களில் பெய்ஜிங்கிற்கு தனது விருப்பம் மற்றும் மலேசியாவின் தலைவிதியைக் கட்டுப்படுத்தும் உறுதிப்பாடு குறித்து நாட்டில் சீனத் திட்டங்களை ரத்து செய்வதன் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்பினார். வெளிப்படையாக, மலேசியா சீனாவின் கடன் வலையைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார். சிக்கல் என்னவென்றால், சீனாவுக்கு எதிரான மகாதீரின் கிளர்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. சீன ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களின் செலவைக் குறைக்க பெய்ஜிங்கை மீண்டும் பேச்சுவார்த்தை அட்டவணைக்கு கொண்டு வருவதே மகாதீரினால் செய்யக்கூடியதாக காணப்பட்டது. 2019 ஏப்ரல் முற்பகுதியில் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு திட்டத்தின் செலவை மூன்றில் ஒரு பங்கு குறைக்க சீனா ஒப்புக்கொண்டது. இதுவே மலேசிய பிரதமர் மகாதீரின் சீனா தவிர்ப்பின் உச்ச கட்ட இயலுமையாக காணபபட்டது. இது மலேசியாவின் இறைமை தன்மை சீன வசமாயுள்ளது என்பதையே பறைசாற்றுகிறது.
இதைத்தாண்டி அபிரிக்க நாடுகளும் சீனாவின் கடன் பொறி இராஜாதந்திரத்துக்குள் சிக்குண்டு மீள முடியாது உள்ளன. சீன கடன் வழங்குநர்களால் முன்வைக்கப்பட்ட பெரிய கடன்களை நாடு திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், ஆப்பிரிக்காவில், கென்ய அரசாங்கம் மொம்பசாவில் உள்ள துறைமுகத்தை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று பல அறிக்கைகளும் உள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூலோபாய கடல்சார் சொத்துக்களின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சீனா அதிகப்படியான கடன்களைப் பயன்படுத்துகிறது என்று 2018ஆம் ஆண்டில் வாஷிங்டனின் ஹட்சன் நிறுவனத்தில் ஒரு உரையில் அமெரிக்க மன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக துணை ஜனாதிபதி பென்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளிலும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் பொதுத்தேர்தல் முடிவுகளிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று மீள ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷா அரசாங்கமானது மீள முதலீட்டை வரவேற்பதாக கூறி சீனாவின் கடன் பொறி இராஜதந்திரத்துக்குள் இலங்கையை முழுமையாக மூழ்கடிக்கும் அபாய நகர்வையே மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ராஜபக்ஷா அரசாங்கத்தின் முன்னைய ஆட்சிப்பகுதியில் இலங்கையின் தெற்கிலேயே சீனாவின் அதினமான முதலீட்டை வரவேற்று வந்தனர். தற்போதைய ஆட்சியில் இலங்கையின் வடக்கேயும் சீனாவின் முதலீட்டை வரபேற்பதானது இலங்கை முழுவதையும் சீனாவிற்கு தாரைவார்த்து கொடுக்கும் செயலாகவே காணப்படுகின்றது. தமிழர் தாயகங்களில் சிங்களத்தை முதன்மைப்படுத்தும் ராஜபக்ஷ அரசாங்க ஆட்சியிலேயே, இலங்கையின் தலைநகரில் இலங்கை தேசிய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு சீன மொழியில் கொழும்பு துறைமுக நகரில் பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாயின் இலங்கையின் இறைமையின் பலவீனத்தை உள்ளக இனமுரண்பாட்டை தளர்த்தி இலங்கையர்களாய் தேட வேண்டிய நிலையே இன்று இலங்கையர்களிடம் உள்ளது.
Comments
Post a Comment