பிரதமர் உரையில்; இலங்கை தேசியவாதத்தை சீன தேசியவாதமாக்க முயற்சிக்கிறாரா? -ஐ.வி.மகாசேனன்-

பல நாடுகள் சீன முதலீடுகளை மறு மதிப்பீடு செய்தாலும், இலங்கையில் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை சீனாவுடனான பொருளாதார ஈடுபாட்டை இரட்டிப்பாக்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காலப்பகுதியிலும் போது கூட, பெய்ஜிங்கின் இலங்கைக்கான கருத்துக்கள் ஒரு விழிப்புணர்வோடு தொடர்கின்றன. ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டில்;, சீன செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு தனித்துவமான தருணமாக கருதப்படுகிறது. எனினும் இலங்கையர்கள் மத்தியில் சீனாவுடனான இலங்கை அரசாங்கத்தின் உறவு தொடர்பில் அதிருப்தியான எண்ணங்களும் சந்தேக பார்வைகளும் ஒருதளத்தில் காணப்படவே செய்கிறது. இது ராஜபக்ஷாக்களிற்கான ஆதரவை மக்களிடம் குறைப்பதாக விமர்சனம் உண்டு. இந்நிலையை சீர்செய்ய ராஜபக்ஷாக்களின் நிர்வாகம் சீனா தொடர்பான நேரான எண்ணங்களை இலங்கையின் பெரும்பான்மை இன சிங்கள பௌத்த தேசியவாத மக்களிடையே பரப்புரை செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலானதோர் செயற்பாடாகவே சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மெய்நிகர் வழியூடாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்கள் ஆற்றிய உர...