அமெரிக்கா-இலங்கை உறவை பலப்படுத்துவதற்கான பொறி மகிந்த சமரசிங்காவா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை-சீனா நெருக்கமான உறவு, இலங்கை-அமெரிக்கா நெருக்கடிமிக்க உறவு பற்றிய உரையாடல்களே ராஜபக்ஷாக்களின் மீளெழுச்சியின் பின் அதிகமாக உரையாடப்பட்ட அரசியல் உரையாடலாகும். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ராஜபக்ஷாக்களின் ஆட்சியின் ஆரம்ப நாட்களும் காணப்பட்டது. எனினும் குறுகிய காலஅனுபவத்திலேயே ராஜபக்ஷாக்கள் நிர்வாகம் மேற்கு நாடுகளிடையே சமநிலையை பேண வேண்டிய தேவையையும் உணர்ந்துள்ளார்கள். அதிரடி மாற்றங்களாக சீனாவுடனான நெருக்கமான உறவிற்கு சமாந்தரமாகவே அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவை சீரமைக்கும் வகையில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் அதன் விளைவுகள் தொடர்பிலும் இப்பகுதியிலேயே முன்னைய வாரங்களில் அதிகமாக உரையாடப்பட்டுள்ளது. இவ்இராஜதந்திர நகர்வுகளில் ஒன்றாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்காவை அமெரிக்க தூதராக நியமிக்க முன்னெடுக்கப்படும் நகர்வுகளும் அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் மகிந்த சமரசிங்க அமெரிக்க தூதராக நியமிப்பதில் காணப்படும் இராஜதந்திர முக்கியத்தை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா ப...