காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின் எதிர்வினைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் கொழும்பின் ஒருபகுதியினரும், பல்கலைக்கழக மற்றும் உயர்கற்கை மாணவர்களுமே போராட்ட களத்தில் களமிறங்கி உள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறும் கோதா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டங்கள் அவ்வகையிலானதாகவே காணப்படுகின்றது. இப்போராட்டங்களை ஆதரிக்கும் தரப்பினர் காலிமுகத்திடல் போராட்டத்தை இலங்கையின் புதிய யுகத்திற்கான புரட்சியாக பிரச்சாரப்படுத்துகிறார்கள். எனினும் காலிமுகத்திடல் போராட்டம் புரட்சியின் இயல்புக்குள் பயணிக்கவில்லை என்ற வாதப்பிரதிவாதங்களும் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிக்கான பரிணாமத்தில் பயணிக்கின்றதா என்ற தேடலை அடிப்படையாய் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 அன்று, நுகேகொட ஜூபிலி சந்தியில் தொடங்கிய மக்கள் போராட்டம், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா தலைமையி...