ஜனநாயக மறுசீரமைப்புக்கு வழிகோலுமா இஸ்ரேல் வசந்தம்! -சேனன்-
20ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மேற்காசியாவின் அரசியலின் அமைதியின்மைக்கு காரணமான இஸ்ரேல் இன்று உள்நாட்டு போருக்கு ஏதுவான சூழலில் பயணிக்கின்றது. இஸ்ரேலின் அரசியல் ஸ்திரமற்ற சூழல் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி அரசியலை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணி இஸ்ரேலின் அரசியலை மேற்காசியாவின் ஜனநாயகம் பலவீனமான அரசியல் இயல்புக்குள் நகர்த்தி செல்கின்றது. குறிப்பாக அரசாங்கக் கொள்கைகளின் உச்ச நீதிமன்ற மேற்பார்வையை கட்டுப்படுத்தும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் புதிய சட்டம், ஆழமடைந்துவரும் சமூகப் பிளவுகள் மற்றும் சாத்தியமான ஜனநாயக பின்னடைவு குறித்து இஸ்ரேலியர்களிடையே எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. இவ்எச்சரிக்கை மக்களை இஸ்ரேல் வீதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு திரட்டியுள்ளது. அரசியல் அவதானிகள் 'இஸ்ரேலின் வசந்தம்' என அண்மைய இஸ்ரேலியர் போராட்டங்களை கோடிட்டு காட்டுகின்றனர். இக்கட்டுரை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நீதித்துறை திருத்தத்தின் போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட், நாட்டின் நீதித்துறை அமைப்பின் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பின் முதல் பகுதியை கடந்த ஜூலை-24அன...