தென்னிலங்கையில் பௌத்தம் மாத்திரமன்று கிறிஸ்தவமும் இனவாதத்தினையே பரப்புகிறது? -ஐ.வி.மகாசேனன்-

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல்-04 செய்தி அலைவரிசை இலங்கையின் அரசியலில் பிரதான நிலையை கட்டமைத்து வருகின்றது. ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் சாட்சியங்களை பொதுவெளிக்கு கொண்டு வந்தது முதல் தற்போது ஆட்சியதிகாரத்திற்காக நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை தென்னிலங்கையின் வன் அரசியல் முகத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதில் முதன்மையான நிலையை பெற்றுள்ளது. அதேவேளை சனல்-04இன் 'இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்' ஆவணக்காணொளியை சதிக்கோட்பாடாக சித்தரிக்கும் நிகழ்வுகளையும் சிங்கள பௌத்த பேரினவாதம் உயரளவில் மேற்கொண்டு வருகின்றது. எனினும் 'இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்' ஆவணக்காணொளியின் விளைவுகள் மதத்தை கடந்து சிங்கள தென்னிலங்கையின் சுயரூபத்தை அளவிடவும் துணைபுரிவதாக அமைகின்றது. குறிப்பாக பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மன்னிப்பு பற்றிய உரையாடல் அதிக சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை பேராயர் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாடுகளூடாக தென்னிலங்கையின் அரசியல் எண்ணங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர்-08அன்று கொழும்பு கொச்சிக்கடை கத்தோலிக்க தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்ற உரையில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைஇ 'உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக' தெரிவித்துள்ளார். மேலும்இ 'அவ்வாறு செய்ய முடியவில்லை எனின் நாம் மதங்களை பின்பற்றுவதால் உள்ள பயன் தான் என்ன' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இப்பின்னணியில் பேராயரின் அரசியல் மற்றும் ஆண்மீக நிலைப்பாட்டின் முரண்நகை அதிக விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. பாவமன்னிப்பு கொடுப்பது கத்தோலிக்க முறைப்படி காணப்படுகின்ற போதிலும்இ அதற்குரிய தர்மம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு காணப்படுகின்றதா எனும் கேள்விகளிலேயே பேராயர் மீதான விமர்சனமும் கட்டமைக்கப்படுகின்றது. சிரேஷ;ட ஊடகவியலாளர் நிக்ஷன்இ 'மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக ஒருவர் பாவமன்னிப்பைப் பெற முடியும் என்று அர்த்தமல்ல. இதனை விளக்கும் வாசகங்கள் பைபிளில் உண்டு. (கொரிந்தியர் பத்தாம் பதினொரம் அதிகாரங்கள்) இது பற்றி எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை.' என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எந்த அடிப்படையில் பாவமன்னிப்பு வழங்க முடியுமென சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பேராயர் மல்கம் ரஞ்சித்இ இலங்கை கத்தோலிக்க மதத்தின் பேராயர் என்ற உயர் அங்கீகாரத்தோடும்இ வத்திக்கான் திருத்தந்தையின் கர்த்தினால்களில் ஒருவர் என்ற சர்வதேச அங்கீகாரத்தோடும்இ பௌத்த சமயத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட தன் சிங்கள இனம் சார்ந்து மாத்திரம் செயற்படுகிறாரோ எனும் சந்தேகங்களை நடைமுறையில் உருவாக்கி உள்ளார். இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவதுஇ சமகாலத்தில் மதக்கருத்தியலை முன்னிறுத்தி பாவமன்னிப்புக்கு தயாராகும் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் கடந்த காலத்தில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் துயரத்தை மதகுருவாக இருந்து அணுக தவறியுள்ளார். குறிப்பாக 2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலையுடன் போர் நிறைவுக்கு கொண்டு வந்த போதுஇ ஒரு தேசிய இனத்தின் விடுதலை நசுக்கப்பட்டது மற்றும் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது என்ற துயரங்களை மறந்து தமிழினப்படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான ராஜபக்ஷhவுக்கு வெளிப்படையாகவே நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்திருந்தார். இச்சந்தர்ப்பம் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மத தர்மம் அதிக சந்தேகத்தை உருவாக்குவதாக அமைகின்றது. மேலும்இ இன்று சர்வதேச நீதி விசாரணை பற்றிய உரையாடலை முன்னிறுத்தும் பேராயர் மல்கம் ரஞ்சித்இ 2012களில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதிப்பொறிமுறையில் ஐ.நா மனித உரிமைப்பேரவை சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்திய போது முழுமையாக நிரகரித்திருந்தார். இலங்கைக்கு உள்ளக விசாரணையே பொருத்தமானதென பரிந்துரை செய்திருந்தார். இன்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய மல்கம் ரஞ்சித்தினுடைய கரிசனை அதிகம் தேவாலயங்கள் மீதான தாக்குதலை முன்னிறுத்துவதாகவே நேர்காணல்களில் அமைகின்றது. அதில் இறந்த உயிர்களின் வலிகளை ஒப்பீட்டளவில் குறைவாகவே உரையாட முனைகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகம் மரணித்தவர்கள் தமிழர்கள் என்பதால் தானோ சிங்கள பேராயரால் இறப்பின் வலியை உயரளவில் அனுக முடியவில்லையோ என்பது பரவலான விமர்சனமாக அமைகின்றது.

இரண்டாவதுஇ சிங்கள பேரினவாதம் தமது பேரினவாதத்தின் தலைமையாக கருதும் ராஜபக்ஷhக்களுடன் பேராயர் மல்கம் ரஞ்சித் அதிக நட்புறவை பேணி வருகின்றார். குறிப்பாக பேராயரின் கடந்த கால செயற்பாடுகள் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் நீட்சியிலேயே முழுக் கனத்தையும் செலுத்தியிருந்தது. முதன்மையாக 2012இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச நீதி விhரணையை மறுதலித்து உள்ளக நீதிப்பொறிமுறைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டமையானது அதனையே வெளிக்கொணர்கிறது. மேலும்இ கோத்தபாய ராஜபக்ஷh ஜனாதிபதியாக இருந்தபோது பௌத்த சமயத்தை முதன்மை மதமாக ஏற்றுக்கொள்வதாக மல்கம் ரஞ்சித் பகிரங்கமாக உறுதியளித்திருந்தார். இது மல்கம் ரஞ்சித்திடம் இருந்த சிங்களத் தேசிய உணர்வையே பகிரங்கப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விசாரணைகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷh மீது தேர்தல் காலத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். இது சிங்கள பேரினவாதத்திடம் காணப்பட்ட இலங்கையின் பாதுகாப்புக்கு நம்பகமானவர்கள் ராஜபக்ஷhக்கள் எனும் பொது மனப்பாங்கை வெளிப்படுத்துவதாவே அமைகின்றது. எனினும் கோத்தபாய ராஜபக்ஷh அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதமாகியதால் மல்கம் ரஞ்சித் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தார். எனினும் சனல்-4 ஆவணக்கானொளி மல்கம் ரஞ்சித்தினுடைய நண்பர்கள் மீது பழி சுமத்தப்பட்ட சூழலில் பாவமன்னிப்;பை கோருவதாக அமைகின்றது.

மூன்றாவதுஇ இலங்கையின் பேராயராகவும் வத்திக்கான் திருத்தந்தையின் கர்தினாலாகவும் கத்தோலிக்க மதத்தின் முதன்மையானவராக காணப்படுகின்ற போதிலும் மல்கம் ரஞ்சித் தமிழ் கத்தோலிக்க மதகுருமார்களையும் பாதுகாக்க தவறியுள்ளார். முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் முள்ளிவாய்க்காலில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். பின்னாட்களில் அவரின் நோய்ப்படுக்கை மற்றும் மரணத்தின் பின்னால் சிங்கள இராணுவம் மீது தமிழ் பரப்பில் சந்தேகம் காணப்படுகின்ற போதிலும்இ அதற்குரிய நீதிக்கோரிக்கைகளை மேற்கொள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் தயாராக இருந்திருக்கவில்லை. மேலும்இ 1982இல் அருட்தந்தை சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்படும் வரையில் ஒன்பது தமிழ் அருட் தந்தையர்கள் இலங்கை இராணுவத்தால் நேரடியாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பல அருட்தந்தையர்கள் காணமலாக்கப்பட்டுள்ளார்கள். இன்றும் உறவுகள் தேடிக்கொண்டுள்ளன. பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சூழலில் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடைந்துள்ளனர். இவை பற்றி சற்றும் மல்கம் ரஞ்சித் பொது அரங்கில் உரையாட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில் இலங்கை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈழத்தமிழ் கத்தோலிக்க மதகுருமார்களிடமிருந்து இனவாத சார்பற்ற நியாயமான அணுகுமுறையை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டத்தில் தேசிய கோரிக்கையின் நியாயத்தன்மையை வலுச்சேர்க்கும் வகையில் பல கத்தோலிக்க மதகுருமார்கள் நேரடியாக தமிழ்த்தேசிய உரிமைப்போராட்டத்தை சாத்வீக வழிகளில் நெறிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக ஆயர் ஜோசப் ஆண்டகை தமிழினப்படுகொலைக்கான நீதிக்கோசத்தை வலுப்படுத்தியவர்களில் முன்னணியில் காணப்படுகின்றார். அதுமட்டுமன்றி இன்றும் தமிழ்த்தேசியத்தின் பாதுகாவலர்களாக கிறிஸ்தவ மதகுருக்களின் பணி முதன்மையானது. துமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு போரின் அவலங்கள் இழப்புகளுக்கு மத்தியில் வடக்குக் கிழக்குத் தமிழ் ஆயர்கள்இ அருட்தந்தையர்கள்இ அருட் சகோதரிகள் பொறுப்புடன் செயற்பட்டனர். 2009ஆம் ஆண்டு போரின் பின்னரே வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் உருவாக்கப்பட்டது. எனினும் அது தமிழ் ஆயர் மன்றம் என்று வெளிப்படையாகக் கூறப்படுவதுமில்லை. அவ்வாறாக இனவாதத்தை முதன்மைப்படுத்தி செயற்படுவதுமில்லை. இலங்கைக் கத்தோலிக்கத் திருஅவையின் கூட்டுப் பொறுப்பு மற்றும் சமய ஒற்றுமை என்ற பண்பின் அடிப்படையில் வடக்குக் கிழக்கு ஆயர் மன்றம் இயங்குகின்றது. தமிழினத்தின் நீதிக்கோரிக்கையை கிறிஸ்தவ அறத்துக்குள் வலியுறுத்துகின்றார்கள். சமகால அரசியல் விவகாரங்களில் தமிழ் அருட் தந்தையர்கள் பின்பற்றுகின்ற நிதானம்இ பொறுப்புஇ பேராயர் மற்றும் திருத்தந்தையின் கர்த்தினால் என்ற முறையில் ரஞ்சித் மல்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. முழுமையாக சிங்கள இனவாதத்தின் சாட்சியமாகவே காணப்படுகிறார்.

எனவேஇ தென்னிலங்கை முழுமையாக சிங்கள கட்டமைப்புக்குள் இனவாத எண்ணங்களுக்குள்ளேயே பரிணமித்துள்ளது என்பதையே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. பேராயர் மல்கம் ரஞ்சித்திடம் தனது இனத்துக்குரிய தேசியச் சிந்தனை இருக்கலாம். அது தவறல்ல. தேசியம் மதக்கூறுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு. எனினும் மல்கம் ரஞ்சித் ஆதரிப்பது சிங்களப்பேரினவாதம். குறிப்பாக தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் விடுதலையை நிராகரிக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் அன்பையும் அறத்தையும் போதிக்கும் மதத்தலைவரின் எண்ணங்களுக்குள் இனவாதம் ஆழமாக நிலைகொள்வது ஆபத்தானதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-