கிழக்கு மீதான பேரினவாத ஆதிக்கமும் ஈழத்தமிழர் அரசியல் இருப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தினசரி புதிய பரிமாணங்களுக்குள் நகர்ந்து செல்கின்றது. 'அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்' என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஒக்டோபர்-25அன்று தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு, பிரச்சாரம், அச்சுறுத்தல் என சிங்கள பேரினவாதிகள் தமிழர் நிலங்கள், தமிழர்கள், தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீது பேரினவாத நடவடிக்கைகளை தினசரி அதிகரித்து வருகின்றனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வீச்சுப்பெறுகின்ற போதிலும், கிழக்கில் முதன்மையான தாக்கத்தை செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் கிழக்கில் தமிழர்களின் அரசியல் தலைமைகளில் சாணக்கியனை தவிர, வேறு அரசியல் தலைமைகள் தமிழர்களின் விடயங்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாட்டை அவதானிக்க முடியவில்லை. சாணக்கியனிடமும் முதிர்ச்சியான அரசியல் அனுபவமின்மை வினைத்திறனான செயற்பாட்டை நகர்த்துவதாக அமையவில்லை. குறிப்பாக கடந்த வாரங்களில் தமிழ் அரசியல் தரப்பின் போராட்ட ம...