தேசிய மக்கள் சக்தியின் சகோதரத்துவ நாடகமும் ஈழத்தமிழர்களின் நூற்றாண்டு கால ஏமாற்ற அனுபவமும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பதிவுகள் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அவற்றை ஈழத்தமிழினம் சரியாக கட்டமைக்கவோ அல்லது மூலோபாயரீதியாக கையாளத் தவறியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறியுள்ள தென்னிலங்கை தரப்பினர் இனப்படுகொலை சுவடுகளை மறைப்பதில் அரச இயந்திரமாக தந்திரோபாயமாக செயற்பட்டுள்ளனர். இப்பின்னனியிலேயே 2025ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலை நினைவு நாளில் 'சகோதரத்துவ தினம்' எனும் அறிவிப்புக்களும் அவதானிக்கப்படுகின்றது. இந்நிகழ்வை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தினர் ஒழுங்கமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது ஒருவகையில் இடதுசாரி சொற்பதங்களுக்குள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்ற விமர்சனம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இக்கட்டுரை அரசறிவியலில் 'சகோதரத்துவம்' என்பதன் பொருத்தமான விளக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான பொதுப் பார்வையில் சகோதரத்துவம் என்ற உரையாடல் ஒன்றிணைந்து வாழ்வதற்கா...