ரஷ்சியா-உக்ரைன் போரும் மேற்குலக்தின் நெருக்கடிகளும்! -ஐ.வி.மகாசேனன்-
கடந்த இரண்டு மாதங்களாக கொதி நிலையிலிருந்த ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இரு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக ரஷ்சியா பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் சுதந்திர குடியரசுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைன் மீது போருக்கான அறிவிப்பை நிகழ்த்தி கடுமையான போரை புடின் உக்ரைன் நிலப்பரப்பில் நிகழ்த்தி வருகிறார். ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனத்தை தொடர்ந்து ரஷ்சிய சார்பு அரசுகளும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன. எனினும் உக்ரைன் எல்லையில் ரஷ்சிய நிலப்பரப்பில் இராணுவ குவிப்பு மேற்கொள்ளப்பட்டு கொதிநிலையில் காணப்படுகையில் போருக்கான எச்சரிக்கைகளை முன்வைத்த அமெரிக்கா, ரஷ்சியாவின் சுதந்திர தேச மற்றும் போர் அறிவிப்புக்கு பின்னர் ரஷ்சியாவிற்கு எதிராக காட்டமான எதிர்வினைகளை முன்னெடுக்கவில்லை. பொருளாதார தடைகளுடன் மட்டுப்படுத்தியுள்ளது. இது சர்வதேச அரசியலில் நுணுக்கமான தேடலை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்கள் மீதான ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனமும் அதன் பின்னரான சர்வதேச அரசியல் ...