வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையும் இராஜதந்திரமும்! -ஐ.வி.மகாசேனன்-

சர்வதேச அரசியலில் அரகளிடையேயான உறவில் எப்போதுமே யதார்த்தவாத சிந்தனையான அராஜகவாதமும் அதிகாரமுமே நிரம்பி உள்ளது. சர்வதேச அரசியல் நிகழ்வுகளை தேடுமிடத்து மாறி மாறி அராஜகம் பற்றிய உரையாடல்களே முதன்மை பெறுகிது. அத்துடன் அவற்றுக்கிடையிலா இடைவினை தொடர்புகளும் தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக ரஷ்சியா-உக்ரரைன் விவாகாரத்தை மையப்படுத்தியே உலக அரசியல்  பயணிக்கிறது. அதனை விடுத்து வேறு சர்வதேச அரசியல் நிகழ்வினை தேடுவோமாயினும் கூட அதிலும் ஏதொவொரு வகையில் ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தின் தாக்கங்களும் உரையாடப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். இதுவே சர்வதேச அரசியலின் யதார்த்தமுமாகும். இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் விவாகரத்துக்குள் உலக நாடுகளின் பார்வைகள் குவிந்திருக்கையில், வடகொரியா அணுவாயுத பரிசோதனையில் நிகழ்த்தி வரும் உச்சத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.  இந்நிலையில் வடகொரியா ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஏழாவது முறையாக ஏவுகணை சோதனையை ஜனவரி-30(2022) மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிலோமீட்டர் உயரத்தை எட்டியதாகவும், 800 கி.மீ தூரத்திற்கு 30நிமிடங்கள் பறந்ததாகவும் ஜப்பானிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஏவுகணை, ஜப்பான் கடலில் விழுந்தது. கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு  வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என கூறப்படுகிறது.

வடகொரியாவின் ஏவுகனை பரிசோதனை தொடர்பான தகவலை தென்கொரியா மற்றும் ஜப்பான் அதிகாரிகள் முதலில் வெளிப்படுத்திய போதிலும், வடகொரிய அரச ஊடகமான KCNAசெய்தி நிறுவனம் பரிசோதனையின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு வடகொரிய அரசு  Hwasong -12 என்ற இடைநிலை ஏவுகணையை(IRBM) உள்ளூர் நேரப்படி ஜனவரி-30 காலையில் சோதித்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,  Hwasong-12 என்ற இடைநிலை ஏவுகணை பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் தீவுப்பிரதேசமாகிய குவாமை அடையும் திறன் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஏவுகணையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களாக KCNAசெய்தி நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்று, சீனாவுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள ஏவுகணை ஏவுகணையிலிருந்து எழும்புவதைக் ஒருவர் படம் பிடித்துள்ளார். மற்றொன்று விண்வெளியில் இருந்து ஏவுகணையின் போர்க்கப்பலில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களைக் காட்டுகிறது. 

அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மறுதொடக்கம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி பிடன் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்க பிரதேசங்களை அடையும் திறன் கொண்ட ஆயுதங்களை ஏவுவதற்கு வடகொரியா முயற்சிப்பதாக சர்வதேச அரசியல் பரப்பில் எச்சரிக்கைகள் எழுகையில்,   Hwasong-12ஐக் காட்டுவதன் மூலம் வடகொரியா இந்த ஆண்டு இதுவரை தனது வலுவான செய்தியை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. ஒரு நிலையான பாதையில் சுடப்படும் போது, அணுசக்தி திறன் கொண்ட தரையிலிருந்து தரையிறங்கும் ஆயுதம் கோட்பாட்டளவில் ஜப்பானில் எங்கும் அடையும் திறன் கொண்டது. அதே போலவே குவாம் மற்றும் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் சங்கிலியின் மேற்கு முனை வரை தாக்கும் திறன் கொண்டவை என்றே அமெரிக்க அதிகாரிகள் கவலையை பகிர்ந்துள்ளனர். மேலும், குறுகிய தூர ஏவுகணைகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான பரிசோதனைகளுக்குப் பிறகு, அணு ஆயுதங்கள் அல்லது அமெரிக்க நிலப்பரப்பின் சில பகுதிகளைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ( ICBMs ) சோதனைகளுக்குத் தயாராகலாம் என்று சில பார்வையாளர்கள் நம்புகின்றனர். வடகொரியா 2017இல்  Hwasong-15  ICBMI சோதனை செய்தது. இது அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் திறனைப் பெற்றுள்ளது என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர். இதன் வரிசையிலேயே ஜனவரி-30இல் பரிசோதிக்கப்பட்ட  Hwasong-12 இடைநிலை ஏவுகணையினையும் மதிப்பீடு செய்கிறார்கள்.

இதனடிப்படையில் வடகொரியாவின் அதிகரித்து வரும் ஏவுகணை சோதனைகள் அணு ஆயுதங்கள் மற்றும்  ICBM சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோடியாக இருக்கலாம் என்ற தேடலை சர்வதேச அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.

முதலவாது, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையில் ஜனவரி-31இல் மேற்கொள்ளப்பட்ட ஒரே மாதத்தின் ஏழாவது ஏவுகணை பரிசோதனையானது, பொருளாதாரத் தடைகள் நிவாரணம் என்பவற்றுக்குள்ளும் அதன் அணுசக்தி அந்தஸ்தை சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான உந்துதலின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் பெருந்தொற்று தொடர்பான சிக்கல்களால் கிம் ஜாங் உன், வெளியில் இருந்து நிவாரணம் பெற விரும்பினாலும், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சரணடைய விரும்பவில்லை என்பதனையே தொடர்ச்சியான ஏவுகணை பரிசோதனை மூலம் உறுதி செய்கின்றார். கிம்மின் அழுத்தப் பிரச்சாரம் வாஷிங்டனை வடக்கை ஒரு அணுசக்தியாக ஏற்கும்படி கட்டாயப்படுத்துவதையும், அவர்களின் அணு ஆயுதக் குறைப்பு-உதவி இராஜதந்திரத்தை பரஸ்பர ஆயுதக் குறைப்புக்கான பேச்சுவார்த்தைகளாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டாவது, சமகால சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் தலைமை உலக அதிகாரத்திற்கு சரியான தலைமையை வழங்கக்கூடிய ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்ற பார்வை காணப்படுகின்றது. குறிப்பாக, ஜோ பைடன் ஆட்சிபீடமேறி ஒரு வருடத்தினுள் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றியமை; ஐரோப்பாவுக்கு தலைமை தாங்க முடியாமை; ஆக்காஸ் உடன்பாட்டில் பிரான்ஸ் ஜேர்மனி என்பனவற்றை அரவணைத்து செயல்படாமை மற்றும் ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தில் ரஷ்சியாவின் அதிகாரம் மேலோங்கும் தோற்றம் என விமர்சனங்களை மாத்திரமே பெற்றுள்ளார். இக்காலப்பகுதியை தனக்கு சாதகமான களமாக பயன்படுத்திக்கொள்ள வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் எத்தனித்துள்ளார் என்பதையே வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கை புலப்படுத்துகிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, வடகொரியா சோதனை செய்ததில் ஜனவரி-31 மேற்கொண்ட பரிசோதனை மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக உள்ளது. இது இராஜதந்திரத்தில் நீடித்த முட்டுக்கட்டைக்கு மத்தியில் வாஷிங்டன் மற்றும் அண்டை நாடுகளிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக சர்வதே அரசியலின் அரசுகளிடையேயான உறவுகளின் முதன்மையான அராஜகவாத யதார்த்தவாத கோட்பாட்டை மீண்டும் புத்துயிரளித்து முதன்மைப்படுத்த கிம் ஜோங் உன் தயாராகுகிறார் என்பதே வெளிப்படுகிறது.

மூன்றாவது, சர்வதேச அரசியலில் சமகாலத்தில் ரஷ்யா -உக்ரைன் விவகாரத்திலேயே அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் அதிக கவனத்தை குவித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் வடகொரியா தனது பிராந்திய முரண்பாட்டு அரசுகளுக்கு நெருக்கடியை உருவாக்குவதனூடாக தனது அதிகாரத்தை பிராந்தியத்தில் பலப்படுத்தி கொள்வதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதனை இராணுவ பலத்தாலும் ஆயுத வலுவாலும் நடவடிக்கையூடாக அறிய முடிகிறது. ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய மற்றும் கடல்சார் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் ஃபுனாகோஷி டேகிரோ, வட கொரியாவிற்கான பிடனின் சிறப்பு தூதர் சுங் கிம் மற்றும் தென் கொரியாவின் அணுசக்தி தூதர் நோ கியு-டுக் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளில் வடகொரியாவின் மேம்படுத்தப்பட்ட ஏவுகனை பரிசோதனை தொடர்பாக விவாதித்தாக தெரிவித்துள்ளார். மேலும், ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட அழிவு சக்தி மற்றும் வடகொரியாவின்  அச்சுறுத்தலை எதிர்கொண்டு முத்தரப்பு ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது என்ற புரிதலை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகனை பரிசோதனை பிராந்தியத்தை கொதிநிலைக்கு தள்ளியுள்ளது என்பதையே உறுதி செய்கிறது.

நான்காவது, ரஷ்சியாவுக்கான ஆதரவுத் தளமாகவும் வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகளை விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. ரஷ்சிய-உக்ரைன் விவகாரத்தில் உக்ரைனுக்கான ஆதரவு தளத்தில் அமெரிக்காவின் முழுமையான இராணுவ பார்வையும் ரஷ்சியா மீதே குவிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கக்கூடியதாகும். குறிப்பாக ஜனவரி-31 பரிசோதிக்கப்பட்ட ர்றயளழபெ-12 இடைநிலை ஏவுகணை தொடர்பான செய்தியிடலிலும் பசுபிக் பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் தீவை தாக்கும் திறன் கொண்டதென குறிப்பிட்டுள்ளமையானது ஏவுகனை பரிசோதனை முழுமையான அமெரிக்காவிற்கு சவால் விடுவதற்கான நகர்வு என்பதையே  வெளிப்படுத்தி நிற்கிறது. அமெரிக்காவிற்கு நெருக்கடியை அதிகரிப்பதனூடாக தனது நட்பு நாடான ரஷ்சியாவிற்கு ஆதரவான சமிக்ஞையை வடகொரியாh வெளிப்படுத்துவதாகவும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ரஷ்சிய-உக்ரைன் விவகாரம் உலக அரசியலில் முதன்மையான சர்வதேச பிரச்சினையான உருவவெடுத்த சமகாலப்பகுதியிலேயே ஜனவரி மாதத்துக்குள் ஏழு ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளமையானது கவனிக்கத்தக்க விடயமாகும்.

எனவே, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அமெரிக்காவினை சூழ்ந்துள்ள நெருக்கடிகளையும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆளுமைப்பலவீனங்களையும் கடந்த ஒரு வருடங்களில் வெகுவாக பரிசீலித்துள்ளார். இவ் முன்அனுபவங்களை கொண்டே 2022ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து வடகொரியாவின் ஏவுகணை அரசியலுக்கு மீள் புத்துயிரளித்து வருகின்றார். வளர்ச்சியடைந்து வரும் ஏவுகணை பரிசோதனை நடவடிக்கைகளூடாக நீண்டகாலமாக நிறுத்தப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மீது பிடென் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான அதன் நோக்கத்தை வழக்கத்திற்கு மாறாக வேகமான சோதனைகளால் சுட்டிக்காட்ட முனைவதனையே கிம் ஜோங் உன்னின் ஜனவரி மாத ஏழு ஏவுகணை பரிசோதனைகளும் வெளிப்படுத்தி நிற்கிறது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-