ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கையை பின்தொடரும் ரணில்? -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதியும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தையுமுடைய ரணில் விக்கிரமசிங்காவின் சமகால அரசியல் நடவடிக்கைகள் அதிக குழப்பத்தை உருவாக்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் பிரதமராகி, பதில் ஜனாதிபதியாகி, தற்போது இடைக்கால ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களிடையே விமர்சனப்பார்வையே காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மரபுக்குள் வளர்ந்த புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை அமெரிக்க தலைமையிலான மேற்கு சார்ந்த இயல்புடையதாகவே காணப்பட்டு வந்துள்ளது. மாறாக பொதுஜன பெரமுன, மேற்கிற்கு எதிராக கிழக்கே சீனா சார்பான கொள்கையையே முதன்மைப்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்கையில் பலரும் இலங்கையின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் ரணில் விக்கிரமசிங்காவின் மேற்குசார் விம்பத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட நிதியுதவிகள் தடையின்றி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி கொண்டனர். எனினும் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளும் உள்ளக மற்...