சீனாவில் எழுச்சிபெறும் வெகுஜன போராட்டமும் சீனா அதிகார வர்க்கமும் -ஐ.வி.மகாசேனன்-
2020களிள் ஆரம்பத்தில் உலகை நெருக்கடிக்குள் தள்ளிய கோவிட்-19இன் தாக்கங்கள் இன்றுவரை உலக நாடுகள் ஏதொவொரு வகையில் எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக பொதுமுடக்கத்தின் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாயினும் சரி ஏதொவொரு வகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கான ஆபத்துடனேயே நகருகின்றது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவில் அதுசார் தாக்கங்களின் செய்திகள் பெருமளவில் பொது அரங்கிற்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும், சீனாவின் தேசியவாத செயற்பாடுகளினூடாக, அங்கு 'பூச்சிய கோவிட்'(Zero Covid) கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், அது சீனாவின் இனவாதத்தை வளர்ப்பதுடன் சீனா அதிகம் இரும்புதிரை அரசியலுக்குள் நகர்வதாக மேற்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டி வந்தன. இவ்வாறான பின்னணியில் நவம்பர் இறுதி வாரங்களில் சீனா முழுவதும், நாட்டின் கடுமையான 'பூச்சிய கோவிட் தொற்றுநோய்' கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் வளர்ந்துள்ளன. பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த தெருக்களில் இறங்கினர். இக்கட்டுரை சீனாவில் வளர்ந்துவரும் வெகுஜன போராட்டத்தின் அரசியல் தாக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு போராட்டங்கள் சீனாவில் முற்றிலும் கேள்விப்படாதவை அல்ல என்றாலும், வலுவான கண்காணிப்பு உள்கட்டமைப்பு மற்றும் அரச படைகளின் விரைவான பதில்கள் பொதுவாக இவை பரவுவதற்கு முன்பு நசுக்கப்படும் பதிவுகளே காணப்படுகின்றது. அத்துடன் சீனாவின் 1.4 பில்லியன் மக்களில் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர் என்பதைச் சரிபார்ப்பது சாத்தியமில்லை. சமகாலத்தில் சீனாவில் எழுச்சி பெற்றுள்ள வெகுஜன போராட்டம் சீனாவின் மேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் நவம்பர்-24(2022)அன்று ஏற்பட்ட கொடிய தீ விபத்தை தொடர்ந்து ஆரம்பித்துள்ளது. தீ விபத்தில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தீயணைப்பாளர்களை சென்றடைய தாமதப்படுத்தியமையே பொதுமக்களின் கோபத்திற்கு வழிவகுத்தது. மேலும் இறுக்கமான பூச்சிய கோவிட் கொள்கையால், நகரம் 100 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. குடியிருப்பாளர்கள் இப்பகுதியை விட்டு வெளியேற முடியவில்லை மற்றும் பலர் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீன அரசாங்கத்தால் பின்பற்றப்படும் பூச்சிய-கோவிட் அணுகுமுறை சீனாவில் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
உரும்கி குடியிருப்பாளர்களின் ஆரம்ப எதிர்ப்புக்களுக்கு சீன உள்ளூர் அரசாங்கம் அரசாங்கம் முடக்கத்தை கட்டங்களாக நீக்குவதாகக் கூறியது. ஆனால் தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை. இது பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கத் தவறியது மற்றும் எதிர்ப்புக்கள் சின்ஜியாங்கிற்கு அப்பால் வேகமாகப் பரவியது. சீனா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வசிப்பவர்களும் வீதிகளில் இறங்கினர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்தமையால், போராட்ட கோரிக்கைக்குள் அதிக அரசியல் சுதந்திரத்தையும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கை அகற்றவும் அழைப்பு விடுத்துள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான போராட்டங்கள் சீனாவில் மிகவும் அசாதாரணமானது. உள்ளூர் குறைகள் மீதான ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது நிகழும் அதே வேளையில், 1989ஆம் ஆண்டின் தியனன்மென் சதுக்க போராட்ட ஒடுக்குமுறைகளே அதிகம் முதன்மையான எச்சரிக்கையாக அமைகின்றது. இறுக்கமான பூச்சிய கோவிட் கொள்கைக்கு எதிரான போராட்டத்iயும் சீன அரசாங்கம் விரைவாக ஒடுக்கியது. முக்கிய போராட்டத் தளங்களில் காவல்துறையை நிலைநிறுத்தியதுடன், இணையவழி தணிக்கையை கடுமையாக்கியது.
முன்னோடியில்லாத போராட்டங்கள் சீனாவைத் தாக்கியதை தொடர்ந்து, பல நகரங்கள் சில கோவிட் -19 கட்டுப்பாடுகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும் உயர் அதிகாரி ஒருவர் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மென்மையான அணுகுமுறையை அடையாளம் காட்டியுள்ளார். சமீபத்திய நாட்களில், பெய்ஜிங் உட்பட சீனா முழுவதும் குறைந்தது ஆறு நகரங்கள் தங்கள் கோவிட் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்துள்ளன, சில சந்தர்ப்பங்களில் பூட்டுதல்களை நீக்குதல், தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளை எளிதாக்குதல் மற்றும் வெகுஜன சோதனைகளை நீக்குதல் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சின்{ஹவா தெரிவித்துள்ளது. இது பூச்சிய கோவிட் கொள்கை முடிவுக்கு வரக்கூடும் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது.
அமெரிக்கா-சீனாவின் சர்வதேச அதிகாரத்துக்கான போட்டியின் தாக்கங்கள் சீனாவில் இடம்பெறும் வெகுஜன போராட்டத்தில் காணக்கூடிய வாய்ப்புக்களை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் ஆழமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் பூச்சிய கோவிட் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதிலும், சீனாவின் சமகால வெகுஜன போராட்டத்தின் அரசியல் நலன்களையும் நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.
ஒன்று, சீன அரசாங்கத்தால் கோவிட்-19 பெருந்தொற்றின் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பூச்சிய கோவிட் கொள்கை சீன தேசியவாதத்தை கட்டமைப்பதில் முதன்மையான கூறாக சமகாலத்தில் அமைகின்றது. 'ஓநnழிhழடியை' என்பது பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் மீதான வெறுப்பு அல்லது பயத்தின் வலுவான உணர்வு ஆகும். சுருக்கமாக 'வெளிநாட்டினர் மீதான பயம்' என்று புரிந்து கொள்ளலாம். சீனா பூச்சிய கோவிட் கொள்கையூடாக சீன மக்களிடையே வெளிநாட்டினர் மீதான பயத்தை உருவாக்கி சீன தேசியவாதத்தை வளர்த்து வருகின்றது. தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் ஒரு கூட்டு அடையாளம் ஆகும். இதனூடாக சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. அரசியல் சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பெற்ற பிறகு, தேசியவாதம் ஒரு அரசின் மக்களை அந்த அரசுடன் வலுவாக அடையாளம் காணும் வகையில் அணிதிரட்டுகிறது. இந்த அணிதிரட்டல் பெரும்பாலும் இனவெறி மற்றும் இன-தேசியவாதத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒருவரின் தேசத்தின் மகத்துவத்தின் மீதான நம்பிக்கையுடன் கூடுதலாக வெளிநாட்டினர் மீதான பயத்தையும் சந்தேகத்தையும் அல்லது விரோதத்தையும் ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ்களின் மூலங்கள் பற்றிய சீன விவரிப்புகளிலும், வெளிநாட்டு பார்வையாளர்கள் சீனாவுக்குள் நுழையும்போது அவர்களைத் திரையிடும் சீன நடைமுறைகளிலும் வெளிநாட்டினர் மீதான பயம் கட்டமைக்கப்படுகின்றது. மார்ச் 2020 இல், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், 2019ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இராணுவ உலக விளையாட்டுப் போட்டிகளில், கோவிட்-19ஐ உண்டாக்கும் வைரஸை அமெரிக்க இராணுவம் சீனாவிற்குள் இறக்குமதி செய்ததாகக் கூறி ஒரு சதிக் கோட்பாட்டை வெளியிட்டார். அவ்வாறே நவம்பர் 2020இல் சீன அரசு ஊடகம், 'ஒரு இத்தாலிய ஆய்வை ஊக்குவித்தது, இது வுஹானில் வெடிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2019 இல் வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் கோவிட்-19 பரவியிருக்கலாம்' என்றும் பரிந்துரைத்தது. மேலும், பூச்சிய கோவிட் கொள்கை வெளிநாட்டு வருகையாளர்களுக்கு இறுக்கமான நிபந்தனைகளை விதித்தது. நோய்த்தொற்றுக்கான வெளிநாட்டினர் பற்றிய இறுக்கமான நிபந்தனைகள் கோவிட்-19 உடன் மட்டுப்படுத்தப்படவில்லை. 2022 செப்டம்பரில் சீனா தனது முதல் குரங்கு காய்ச்சலை உறுதி செய்தபோது, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ பொதுமக்களுக்கு ஐந்து பரிந்துரைகளை வழங்கினார். முதல் பரிந்துரை, 'வெளிநாட்டவர்களுடன் தோலுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்' என்பதேயாகும். சர்வதேச வருகையாளர்களுக்கான இந்த கொடூரமான தனிமைப்படுத்தல் சீனாவிற்கு வெளியே உள்ள மக்களை அதன் தேசிய பாதுகாப்பிற்கு சாத்தியமான அச்சுறுத்தல்களாக கருதுகிறது. இது சீன மக்களிடையே 'நாங்கள்' மற்றும் 'அவர்கள்' என்ற பரஸ்பர பிரத்தியேக தேசியவாத உணர்வை வளர்க்கிறது. சீன அரசின் பூச்சிய கோவிட் கொள்கையால் சீன தேசியவாதம் தூண்டப்பட்டது. தேசியவாதம் ஆழமாக வளருகையில் தேசத்தின் வளர்ச்சியும் உயர்த்தப்படுகின்றது. இப்பின்னணியில் பூச்சிய கோவிட் கொள்கையை தளர்த்தும் வகையிலான வெகுஜன போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நலன் அமெரிக்காவின் ஈடுபாடு சார்ந்த சந்தேகங்களை அரசியல் ஆய்வாளர்களிடையே உருவாக்குகிறது.
இரண்டு, அமெரிக்க-சீன வர்த்தக போட்டியில் சீனாவின் பூச்சிய கோவிட் கொள்கை அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியானதாக அமைகின்றது. தேசியவாதத்தின் மற்றொரு வடிவமான தொழிலநுட்ப தேசியவாதமும் பூச்சிய கோவிட் கொள்கை சீனர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை விட மேற்கத்திய மாடர்னா(அசுNயு) கோவிட்-19 தடுப்பூசிகள் முதியவர்களின் இறப்பைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்தாலும், சீனா மேற்கத்தேய தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டது. மாறாக, சீனா அதன் சொந்த தடுப்பூசிகளின் உள்நாட்டு வளர்ச்சிக்கு நிதியுதவி செய்கிறது. இது மேற்கின் தடுப்பூசிக்கான சீன சந்தையை தடுப்பதாக அமைகிறது. உலகம் இன்று சந்தைகளை மையப்படுத்தியே போட்டியிடுகிறது நகர்கிறது. சீனாவின் வளர்ச்சியும் அதன் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு உலகின் பெரிய சந்தையாக காணப்படுவதாகும். உள்நாட்டுத் தொழிலுக்கு உதவ, நிறுவனம் தனது தடுப்பூசியை சீனாவுக்கு விற்க விரும்பினால், தடுப்பூசியின் பின்னால் உள்ள முக்கிய அறிவுசார் சொத்துக்களை ஒப்படைக்குமாறு சீனா கோரியது. ஆனால் மாடர்னா சீனாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. மிகப்பெரிய சீன உள்நாட்டுச் சந்தையானது சீனாவின் புதிய உள்நாட்டு மருந்துத் துறையின் வளர்ச்சிக்காகப் பாதுகாக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மூன்று, இரண்டு சவால்கள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்தான, இருத்தலியல் அச்சுறுத்தல்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காணப்படுகின்றன. முதலாவது ஆசியாவில் அமெரிக்க சக்தி மற்றும் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன முயற்சியாகும். இரண்டாவது, எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்பத் தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன முயற்சி ஆகும். இத்தகைய ஆதிக்கம் அமெரிக்காவை சீனப் பொருளாதார சக்திக்கு அடிபணியச் செய்யும். மேலும் இத்தகைய தொழில்நுட்பம் நவீன தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. சீன இராணுவ சக்திக்கு அடிபணிய வேண்டும். இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச அரங்கில் சீனாவினை தனிமைப்படுத்தி அமெரிக்க கூட்டை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பிடன் நிர்வாகம் மும்மரமாக உள்ளது. சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஏறக்குறைய மூன்று ஆண்டுகால கோவிட்-19 தூண்டப்பட்ட தனிப்பட்ட தனிமையில் இருந்து வெளிவந்து, அக்டோபரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸில் அவர் வெளிநாட்டில் பாதகமான சக்திகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை உறுதியளித்ததைத் தொடர்ந்து கடுமையானவராக இருக்கிறார். காலநிலை மாற்றத்திற்கான பிடனின் அர்ப்பணிப்பு மற்றும் கூ365 பில்லியன் சட்டத்தை நிறைவேற்றுவது அமெரிக்காவிலும் பல உலகத் தலைநகரங்களிலும் உள்ள பெரும்பான்மையினரால் கடந்த கால தவறுகளை சரிசெய்வதிலும் ஆக்கபூர்வமான உலக முயற்சிகளை மேற்கொள்வதிலும் கோப்-27 உச்சிமாநாட்டில் சரியானதாக கருதப்பட்டது. இதற்கு மாறாக சீனா மோசமாக செயல்பட்டது. கிரீன்ஹவுஸ் வாயுக்களை மிகப்பெரிய உமிழ்ப்பாளராக சீனா தனது நிலையை உறுதிப்படுத்தியது. மேலும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாகவே சீனாவில் இடம்பெறும் வெகுஜன போராட்டத்தை மேற்கு ஊடகங்கள் முதன்மைப்படுத்துவதும் சீனாவை சர்வதேசத்தின் தனிமைப்படுத்தும் முயல்வாகவே அவதானிக்கப்படுகிறது.
எனவே, சீனாவின் வெகுஜன போராட்டமானது அமெரிக்க-சீனா அதிகார போட்டியின் தாக்கம் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பார்வையாக காணப்படுகின்றது. அமெரிக்காவை சரியான காரியத்தைச் செய்து, சீனாவுடன் போட்டியிட்டு பலனடைந்ததைக் காணக்கூடிய ஒரு இறுதிப் பகுதியாக, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதில் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகளிலிருந்து பிடன் அரசாங்கத்தின் உறுதியான திருத்தம் ஆகும். மேலும், சீனாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதும் முதன்மையாகிறது. சீனாவின் இறுக்கமான பூச்சிய கோவிட் கொள்கையை தளர்த்துவதானது, சீனாவில் ஆபத்தான நோய் அலை ஏற்படலாம். நவம்பர்-29அன்று, கடந்த 24 மணி நேரத்தில் 36,061 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் சீனாவில் பதிவாகியுள்ளதுடன், இதில் அறிகுறிகள் இல்லாமல் 31,911 பேர் உள்ளனர். இந்நிலையில் சீனா தனது புதிய நெகிழ்வுத்தன்மையில் எவ்வளவு தூரம் செல்லும் என்று கணிப்பது கடினமாக உள்ளது. ஆயினும் ஷி ஜின்பிங்கின் கடந்த கால வரலாறும், சீனாவின் இரும்புத்திரை அரசியலும் அமெரிக்காவின் இராஜதந்திரங்களுக்கு உயர்வீச்சான பதிலளிப்பவையாக அண்மைக்கால போக்குகள் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment