தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் தொடர்பான உரையாடல் முனைப்பை பெற்றுள்ளது. எனினும் அரசியல் தரப்பினரும் சிவில் சமுகத்தினரும் இலங்கையின் தேர்தல்கள் தொடர்பில் முனைப்பான உரையாடல்களும் செயற்பாடுகளுமற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டின் பற்றாக்குறையினையே வெளிக்கொணர்கின்றது. இவ்இயல்பின் வெளிப்பாடே எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பொதுப்புத்தியில் ராஜபக்ஷhக்களை தோற்கடிப்பது எனும் ஒற்றை இலக்குடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களை கையாண்டு வருகின்றனர். இந்த நடத்தையிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் கொள்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி தேர்தலை கையாள வேண்டுமென்பதே ஈழத்தமிழரசியல் கருத்தாளர்களின் வெளிப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியில் 2024ஆம் ஆண்டு த...