ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நலனுக்குள்ளேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகள்! -சேனன்-

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் இலக்கு பல முக்கிய புள்ளிகளின் அரசியல் காய் நகர்த்தலை கேள்விக்குற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த ஏற்பாடுகள் கடந்த வருடத்தில் இருந்து உணரப்பட்டு அதற்கான அரசியல் நகர்வுகளும் இலைமறை காயாய் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் வருகின்ற செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் இன்றுவரை தென்னிலங்கை அரசியல் கட்சிகள் உறுதியான வேட்பாளர் தொடர்பான முடிவுகளை அறிவிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மாக்ஸிச லெனினிச பாரம்பரியத்தை உரையாடும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளர்ளை அறிவித்துள்ளது. ஆளும்தரப்பினை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளினை சேர்ந்தவர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உறுதியான வெளிப்படுத்தலை மேற்கொள்ளவில்லை. இச்சூழ்நிலையில் சம்பள முரண்பாடுகளை மையப்படுத்தி அதிகரித்துவரும் தொழிற்சங...