தென்னிலங்கையின் பொருளாதார பிரச்சாரமும்! ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்! -சேனன்-

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி இலங்கை அரசியல் புதிய மாயைகளுக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது . குறிப்பாக அரசியல்வாதிகளின் மாஜை வார்த்தைகளுக்குள்ளே தென்னிலங்கையின் அரசியல் விம்பம் பிரதிபலிக்கப்படுகின்றது . இலங்கையின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் , இலங்கைத்தீவு வளர்ச்சி பாதையில் பயணிப்பதாவும் ஆளுந்தரப்பு பிரச்சாரப்படுத்துகிறது . அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எதிர்த்தரப்பின் வாதமும் பொருளாதார பிரச்சினைக்கேயே சுழலுகின்றது . மாறாக இலங்கையின் பொருளாதாரா பிரச்சினை பரந்ததொரு அரசியல் பொருளாதார பிரச்சினை என்பதையும் , அதன் அரசியல் பகுதியையும் ஒட்டுமொத்த தென்னிலங்கையும் இலாபகரமாக மறைக்க முயலுகின்றனர் . இம்மாஜை பிரச்சாரர்களை ஆதரிக்க வேண்டுமென்றே , அரசியல் உரிமை கோரும் தமிழ்த்தேசிய இனத்தின் சில அரசியல் பிரதிநிதிகளும் முட்டிமோதுவது தமிழினத்தின் சாபமாகும் . இக்கட்டுரை தென்னிலங்கையின் அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் பயணிக்க வேண்டிய போக்கை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது . 2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் . வரலாறு...