ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விஜயமும் ஈழத்தமிழ் அரசியல் எதார்த்தமும்! -ஐ.வி.மகாசேனன்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் கடந்த வாரம் ஈழத்தமிழர் அரசியல் பரப்பை நிரப்பியிருந்தது. குறிப்பாக செம்மணி-சிந்துபதி மனித புதைகுழிக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் பெரிதாக சிலாகிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இதுவோர் பகுதியாகும். காசாவில் குத்துயிராய் பிணங்கள் குவிக்கப்படுகையில் அதனை தடுத்து நிறுத்த இயலாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் எலும்புக்கூடுகளை காட்டியவுடன் நீதியை பெற்றுத் தந்திடுவார்களென எண்ணுவது உயர்வான ஆசையாகும். எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகையில் அவற்றை காட்சிப்படுத்துவதும் உரிமை சார்ந்த போராட்டத்தில் தவிர்க்க முடியாத அவசியமாகும். அதேவேளை ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை 1990களின் இறுதிக் காலப்பகுதியின் பதிவாகிய செம்மணியுடன் சுருக்கி விடவும் முடியாது. 2025 வரையில் தையிட்டி போன்றவற்றில் ஆக்கிரமிப்பு என்ற வடிவத்தில் அழிக்கப்படும் ஈழத்தமிழரின் இருப்பிட உரிமையையும் செம்மணிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்துக்கு நிகராக காட்சிப்படுத்த தவறியிருக்கிறமோ என்ற பார்வையும் ஈழத்தமிழர்களி...