ஈழத்தமிழரசியல் தரப்பு இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழரசியல் பரப்பில் அண்மைக்கால உரையாடல்களில் ஈழத்தமிழர்களுக்கான கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பொதுவெளியில் பல உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வினைத்திறனான செயற்பாடுகளில் பல ஆரோக்கியமான விடயங்கள் உரையாடப்படுகிறது. எனினும் வெளியுறவுக்கொள்கையை செயற்படுத்த வேண்டிய தமிழரசியல் தரப்பு அவ்ஆரோக்கியமான கருத்தாடல்களை உதாசீனம் செய்யும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகிறது. வெளியுறவுக்கொள்கை பற்றிய சிந்தனைகளுக்கு பெரிய அறிவு தேவையில்லையென ஆரோக்கியமான கருத்தாடல்களை உதறிதள்ளும் போக்கையே அரசியல் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இக்கட்டுரையும் சீனா தொடர்பில் ஈழத்தமிழரசியல் தரப்பின் வெளியுறவுக்கொள்கையின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்கொங் மூன்று நாள் பயணமாக டிசம்பர்15-17 வடக்கிற்கு வருகை தந்திருந்தார். அவ்வருகையில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் வரலாற்று மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்ன...